Thenmozhi BA : ம்ஹூம்.. இந்த அப்பத்தா சரியில்லை.. செய்யற வேலையைப் பாருங்க!

கஷ்டத்திலும் கணவனை நினைச்சு மயங்கிக் கிடக்கிறாள்.

By: Updated: March 4, 2020, 12:25:26 PM

Tamil Serial News : சென்னை: விஜய் டிவியில் தேன்மொழி பிஏ தொடர் நடித்துவரும் நடிகை ஜாக்குலின் புண்ணியத்தால் ரசிகர்களை கவரும் விதத்தில் இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஒரு வர்க்க மக்களுக்கு வழங்கப்படும்போது பதவிக்காக என்று அங்கு என்ன நடக்கிறது என்பதை காண்பிக்கும் சீரியலாக இருக்கிறது தேன்மொழி பிஏ.

புஜ்ஜி குட்டி… குல்ஃபி… வெட்கத்தில் சிவந்த ரோஜா!

தேன்மொழியின் பதவிக்கு ஆசைப்பட்டு, அந்த ஊர் பெரிய மனுஷன் தேன்மொழியை தனது மகன் அருள்வேலுக்கு கல்யாணம் செய்து வைத்து, பதவியை மீண்டும் குடும்பத்துக்கே தக்க வைத்துக் கொள்கிறார். இந்த பதவியால் அவரின் அரசியல் கட்சியிலும் அவருக்கு செல்வாக்கு கூடுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி, தனது பதவியின் அருமை பெருமை தெரியாமல், காதல் மயக்கத்தில் கட்டுண்டு கிடக்க. மாமியார் தேன்மொழியை சாதியை சொல்லி வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ளவே இல்லை. இருந்தாலும் சளைத்தவளா தேனு… கஷ்டத்திலும் கணவனை நினைச்சு மயங்கிக் கிடக்கிறாள். இந்த நேரத்தில்தான் அப்பத்தா மட்டும் இவளுக்கு ஆதரவாக துணையா சப்போர்ட் செய்யறாங்க.

அப்பத்தா உசிரை வேற காப்பாத்தி நல்ல பெயர் எடுத்து விடுகிறாள் தேனு.. அப்பத்தாவை ஸ்கூட்டியில் அழைத்துச் சென்று ஊரையே சுற்றுகிறாள் தேன்மொழி. அப்பத்தாவும் ’வாராய் என் தோழி’ என்று ஜீன்ஸ் பட பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே ஐஸ் கிரீம் சாப்பிடறாங்க. ராட்டினம் சுத்தறாங்க…இதெல்லாம் சரிதான்.

தேனு.. நீ அப்பத்தாவுக்கு ஜாமூன் வாங்கிட்டு வந்தேன்னு வச்சுக்கோ.. நாளைக்கு காலையில் உனக்கும் அருளுக்கும் தரமான ஒரு சம்பவம் நடக்கும் என்று சொல்லி தேனுவுக்கு ஆசை காண்பித்து, இவங்க ஆசையைத் தீர்த்துக்கறாங்க. மறுநாள் பார்த்தால்.. அருள் வரும்போது சோப்பை தரையில போட்டு வழுக்கி விழா வைக்கிறாங்க. அருள் வழுக்கி வந்து தேன்மொழி மேல விழுவான் என்று எதிர்பார்ப்பு.

புத்தகங்கள் படிப்பதால் விமர்சிக்கப்பட்ட 13 வயது மாணவன்… ஆதரவு தந்த எழுத்தாளர்கள்!

அதே மாதிரி அருளுக்கு வழுக்க.. ஒரு ஜர்க் விட்டு நிக்கறான்.. பார்த்தால் தேன்மொழி முகடித்தோடு முகம் உரசி..தோளில் சாய்ஞ்சுக்கறா.. பஞ்சும் நெருப்பும் பத்திக்கற நேரம்… தேன்மொழிக்கு அப்பத்தா செய்தது நல்லதுன்னுதான் தோணும் அவ வயசு அப்படி…

ஆனா அப்பத்தா வயசுக்கு…டூ மச் அப்பத்தா!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thenmozhi b a vijay tv serial jaquline

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X