Advertisment

கேன்சரால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத நடிகை! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்!

இதுதான் நான் கையாளும் வழி'

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேன்சரால் முடியை இழந்தாலும் வலிமையை இழக்காத நடிகை! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்!

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே   புற்று நோயால் பாதிக்கப்பட்ட  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Advertisment

தமிழில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் வெளியான  தமிழில் அறிமுகமான நடிகை சோனாலி பிந்த்ரே, சில தினங்களுக்கு  முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.   அந்த பதிவில்  சில நேரங்களில் வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.எனக்கு புற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற அமெரிக்காவிற்கு வந்துள்ளேன்” என்றூ கூறி இருந்தார்.

சோனாலி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பல நடிகர், நடிகைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவருக்கு ஆதரவாகவும், விரைவில் சோனாலி உடல் நலம் தேறி இந்தியா திரும்பவும் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் சோனாலி கிமோ சிகிச்சை பெறுவதற்கு முன் தனது முடிகளை  நீக்கியுள்ளார். இந்த வீடியோவை  மிகவும் உருக்கமாக வெளியிட்டுள்ள அவர், கூட மனதை உருக்கும் விதமாக ஒரு பதிவியையும் வெளியிட்டுள்ளார்.

என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.

அந்த பதிவில் `கடந்த சில நாள்களாக நான் பெற்ற அன்பு எல்லையில்லாதது. புற்றுநோயிலிருந்து எவ்வாறு மீள்வது, அதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை என்ன என்பதை, என்னிடம் பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் பகிர்ந்து கொண்ட கதைகள் எனக்கு அதிக வலிமை மற்றும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.

In the words of my favourite author Isabel Allende, “We don't even know how strong we are until we are forced to bring that hidden strength forward. In times of tragedy, of war, of necessity, people do amazing things. The human capacity for survival and renewal is awesome.” The outpouring of love I’ve received in the last few days has been so overwhelming… and I’m especially grateful to those of you who shared stories of your experiences in dealing with cancer, whether it was your own or of loved ones. Your stories have given me an extra dosage of strength and courage, and more importantly, the knowledge that I’m not alone. Each day comes with its own challenges and victories and so for now, I’m taking this #OneDayAtATime. The only thing I’m trying to be consistent about is maintaining a positive outlook... literally #SwitchOnTheSunshine - it’s my way of dealing with this. Sharing my journey is also part of this process... I can only hope it reminds you that all is not lost and that someone, somewhere understands what you’re going through. ???????? Thank you @tomoarakawa for making this a chic transition from long to short!

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on

முக்கியமாக, நான் தனியாக இல்லை என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவால்களையும் வெற்றிகளையும் கொண்டு வருகிறது. அதை நான் நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொண்டு வருகிறேன். இதுதான் நான் கையாளும் வழி' என்று கூறியுள்ளார். இந்த பதிவைக் கண்ட ரசிகர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் கண்கலங்கி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர்.

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment