/tamil-ie/media/media_files/uploads/2020/08/chadwick-boseman-death.jpg)
சாட்விக் போஸ்மேன் மரணம்
Chadwick Boseman Death: மார்வெல் சினிமா பிரபஞ்சத்தில் ரீகல் பிளாக் பந்தராக புகழ் பெறுவதற்கு முன்பு பிளாக் ஐகான்களான ஜாக்கி ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரவுனாக நடித்த நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் வெள்ளிக்கிழமை இறந்ததாக அவரது பிரதிநிதி கூறினார். அவருக்கு வயது 43.
போஸ்மேன் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பக்கத்தில் இருந்தபோதே இறந்தார் என அவரது விளம்பரதாரர் நிக்கி ஃபியோரவண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சாட்விக் போஸ்மேன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக, அவரது குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
"அவர் ஒரு உண்மையான போராளி, சாட்விக் அதையெல்லாம் விடாமுயற்சியுடன் எதிர் கொண்டிருந்தார். மேலும் நீங்கள் மிகவும் நேசித்த பல படங்களை உங்களுக்குக் கொடுத்தார்" என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். “மார்ஷல் முதல் டா 5 பிளட்ஸ் வரை, ஆகஸ்ட் வில்சனின் மா ரெய்னியின் பிளாக் பாட்டம் மற்றும் பல படங்கள் அனைத்தும், எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி ஆகியவற்றிற்கு இடையில் படமாக்கப்பட்டன. பிளாக் பந்தரில் கிங் டி’சல்லாவை உயிர்ப்பித்தது அவரது தொழில் வாழ்க்கைக்குக் கிடைத்த மரியாதை. ”
போஸ்மேன் தனது நோயைப் பற்றி பகிரங்கமாக பேசியதில்லை.
தென் கரோலினாவில் பிறந்த சாட்விக் போஸ்மேன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் தனது முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பு, தொலைக்காட்சியில் சிறிய வேடங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் ஹாரிசன் ஃபோர்டுடன், அவர் நடித்த ஸ்டோயிக் பேஸ்பால் நட்சத்திரமான ராபின்சனின் அற்புதமான சித்தரிப்பு, ஹாலிவுட்டில் கவனத்தை ஈர்த்தது.
லாக்டவுன் நீடிக்கப்படுமா? முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை!
அவர் கடந்த ஆண்டின் அதிரடி திரில்லர் படமான 21 பிரிட்ஜஸில் தனது முதல் தயாரிப்பை மேற்கொண்டார். அதில் சாட்விக்கும் நடித்திருந்தார். கடைசியாக ஸ்பைக் லீயின் திரைப்படமான, ’டா 5 பிளட்ஸ்’ திரைப்படத்தில் வியட்நாம் போரில் கறுப்பின வீரர்கள் குழுவின் தலைவராக திரையில் காணப்பட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.