Advertisment

முதலிரவில் மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்த நடிகர்: பாக்யராஜ் படம் உண்மை கதையா?

மனைவி சந்தோஷமாக இல்லை, பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என புரிந்து கொண்ட சந்திரபாபு, அவர் காதலனுடன் சேரட்டும் என அவரை விட்டு பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது

author-image
WebDesk
New Update
Chandra Babu and Bhagyaraj

நடிகர் சந்திரபாபு மற்றும் இயக்குனர் பாக்யராஜ்

நடிகர் சந்திரபாபுவின் திருமண வாழ்க்கையில் நடந்ததைதான் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் திரைப்படமாக எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் நடிகர் சந்திரபாபு. 1947 ஆம் ஆண்டு வெளியான பி.எஸ்.ராமையாவின் அமராவதி படம் மூலம் சந்திரபாபு திரைத்துறையில் அறிமுகமானார். காமெடியனாக திரைத்துறையில் அறிமுகமாகி பிரபலமானவர், பின்னர் கவலை இல்லாத மனிதன், குமாரராஜா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல், இசை, ஓவியம், இயக்கம், சிற்பம் அமைப்பது உள்ளிட்ட திறமைகளைக் கொண்டவர் சந்திரபாபு. இவர் பாடிய ‘குங்கும பூவே கொஞ்சு புறாவே’.. ’பிறக்கும் போதும் அழுகின்றான்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: லியோ படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீங்களா? த்ரிஷா பதில்

சந்திரபாபுவின் தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகியாவார். சந்திரபாபு முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். முன்னணி ஹீரோக்களான எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு நிகராக போற்றப்பட்டவர் சந்திரபாபு. அவர்களை விட அதிக சம்பளத்தையும் இவர் பெற்றவர். ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய வெற்றி அடையாத நிலையில், மீண்டும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்தார். புகழின் உச்சத்தில் இருந்த சந்திரபாபு 47 வயதில் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவரது திருமண வாழ்க்கை குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை அறிந்த சந்திரபாபு தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்துள்ளதாக இன்றளவும் ஒரு தகவல் கூறப்படுகிறது. இந்த கதையை மையமாக வைத்து தான் நடிகர் பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள் படம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் உண்மையில்லை என்கிறார்கள்.

publive-image

திருமணம் முடிந்ததும் பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். ஆறு மாதங்கள் இருவரும் குடும்பம் நடத்தினர். மனைவி சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்த சந்திரபாபு, பழைய காதலனின் நினைவில் இருக்கிறார் என புரிந்து கொண்டு அவர் காதலனுடன் சேரட்டும் என அவரை விட்டு பிரிந்துவிட்டார். பின்னர் அவருடைய மனைவி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

மனைவிய பிரிந்தாலும் அவருக்கு சந்திரபாபு நிறைய உதவிகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் சந்திரபாபு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அவர் நடித்து இயக்கிய சில படங்கள் தோல்வியடைந்த நிலையில், கடனில் சிக்கினார் சந்திரபாபு. கடன் தொல்லை அவருடைய கனவு வீடு ஜப்தி செய்யப்படும் நிலைக்குச் சென்றது. இதனால் நிலைகுலைந்த, சந்திரபாபு 1974 இல் மரணமடைந்தார் என்று கூறுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment