scorecardresearch

லியோ படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீங்களா? த்ரிஷா பதில்

லியோ படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீர்களா? என்ற கேள்விக்கு, லோகேஷ் கிட்ட கேளுங்க என த்ரிஷா ஜாலி பதில்

Trisha
நடிகை த்ரிஷா

விஜய் உடன் லியோ படத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, கிளைமாக்ஸ் வரை இருப்பீங்களா என்ற கேள்விக்கு ஜாலியாக பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, முன்னணி நடிகர் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர். சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, அவ்வப்போது முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இதையும் படியுங்கள்: கர்நாடகா தோல்வி பிரச்சனை இல்லை; அண்ணாமலை கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம்; நடிகை நமீதா

இந்த நிலையில், தனியார் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட த்ரிஷாவுக்கு, பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ராங்கி திரைப்படங்களில் சிறப்பாக நடித்தற்காக இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை த்ரிஷாவுக்கு முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, லியோ பத்தி எதுவும் பேசக் கூடாது என லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கார். குந்தவை எனக்கு ரொம்ப ஸ்பெஷலனா கேரக்டர். 14 வருடத்திற்கு பிறகு விஜய் உடன் நடிக்கிறேன். ரசிகர்கள் எப்ப ஜோடி சேர்வீங்கனு 10 வருசமா கேட்டுகிட்டு இருக்காங்க. இந்த படம் முந்தைய படங்கள் போல் அல்லாமல் வேற மாதிரி இருக்கும். எங்களுக்குள் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்துருக்கு என்று கூறினார்.

அப்போது த்ரிஷாவிடம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்துவரும் லியோ படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீர்களா?, பாதியிலே போட்டு தள்ளமாட்டாங்களே என தொகுப்பாளர்கள் பாலா, மணிமேகலை கேட்டனர். அதற்கு, த்ரிஷா இயக்குநரிடமே கேளுங்க.. அவரும் இங்கதானே இருக்காரு என ஜாலியாக கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Trisha jolly answer about leo movie character