Tamilrockers : சார்லி சாப்லின் 2 இணையத்தில் லீக்... தமிழ்ராக்கர்ஸ் அட்டூழியம்

Tamilrockers Leaked Charlie Chaplin 2 Full Movie Online Starring Parbhu Deva, Adah Sharma: சார்லி சாப்லின் 2 இணையத்தில் லீக் செய்தது...

charlie chaplin 2 movie leaked in tamilrockers : நடிகர் பிரபு தேவா நடிப்பில் நிக்கி கில்ராணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள சார்லி சாப்லின் 2 படத்தை தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது.

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு கணேசன், அதா சர்மா, அமித் பார்கவ், லுத்புதீன், அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

charlie chaplin 2 movie leaked in tamilrockers : சார்லி சாப்லின் 2 லீக்

இந்த படம் நேற்று தமிழகம் முழுவதும் எல்லா திரையரங்குகளிலும் வெளியானது. இப்படத்துடன் இணைந்து பரத் நடித்திருக்கும் சிம்பா படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களில் பொதுமக்கள் அதிகமாக சார்லி சாப்லின் 2 படத்திற்கே அதிகமாக விரும்பி போகும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் லீக் செய்திருக்கிறது.

நழுவும் மீனாக தமிழ் ராக்கர்ஸ்: அடிக்கடி இணையதள முகவரியை மாற்றுவது எப்படி?

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியிலும், கோவத்திலும் உள்ளனர். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என பலரும் தமிழ்ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்து வருகின்றனர். நீதிமன்றமும், படத்தை லீக் செய்ய தடை விதித்தப்போது இவர்களின் அட்டூழியம் ஓய்ந்தபாடில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close