Advertisment

TamilRockers: அடிக்கடி இணையதள முகவரியை மாற்றுவது எப்படி?

TamilRockers Download:: ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TamilRockers Darbar movie download, rajinikanth darbar, Darbar full movie download, Darbar tamil movie download, தர்பார் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

tamilrockers.ws.com, tamil gun movie 2020 download, tamil songs download isaimini, தமிழ் ராக்கர்ஸ், தமிழ் ராக்கர்ஸ் தமிழ் மூவி டவுன்லோடு

TamilRockers Leaked Tamil Movies In Online:: தமிழ் ராக்கர்ஸ் அடிக்கடி இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு சினிமா உலகுக்கு டிமிக்கி கொடுத்து வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் இணைய முகவரிக்காகவே இணையத்தை மொய்க்கும் கூட்டமும் அதிகரித்தபடியே இருக்கிறது. புதுப் படங்களை ஆன் லைனில் காணத் துடிக்கும் கூட்டம் அது!

Advertisment

தமிழ் ராக்கர்ஸ், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல... உலக சினிமாவுக்கே மிரட்டல்தான்! கோடிகளை கொட்டி எடுக்கப்படும் சினிமாக்களை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது.

சினிமாப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனதுமே தியேட்டர் ஊழியர்களையோ, வினியோகஸ்தர் தரப்பு ஆட்களையோ பிடித்து முழுப் படத்தையும் ‘காபி’ செய்து ஆன் லைனில் வெளியிடுவதுதான் தமிழ் ராக்கர்ஸின் வேலை. தமிழ் படங்களில் இருந்து ஹாலிவுட் படங்கள் வரை, எந்த மொழிப் படமும் இவர்களின் கோரப் பிடியில் இருந்து தப்புவதில்லை.

இதற்காக உலகம் முழுவதும் தங்கள் ஆட்களை வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். திருட்டுத்தனமாக இதில் புதுப்படங்களை பார்க்க சினிமா ரசிகர்கள் அலை மோதுகிறார்கள். இதனால் இந்த இணையதளத்திற்கு விளம்பரங்கள் மூலமாக வருமானம் கொட்டுகிறது.

Tamilrockers : சார்லி சாப்லின் 2 இணையத்தில் லீக்... தமிழ்ராக்கர்ஸ் அட்டூழியம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடை செய்து பலமுறை அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நீதிமன்றங்களும்கூட புதுப் படங்களை வெளியிட தமிழ் ராக்கர்ஸுக்கு தடை விதித்து பல முறை உத்தரவு பிறப்பித்திருக்கின்றன. எனினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இயங்க முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டால், உடனே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது வெப்சைட் முகவரியில் கூடுதலாக ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொண்டு புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துவிடுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் லட்சக்கணக்கான திருட்டு அபிமானிகளில் ஒருவருக்கு அந்த முகவரி தெரிந்துவிட்டால், ஆன் லைன் மூலமாகவே பலருக்கு அந்த முகவரி பறிமாறப்பட்டுவிட்டுகிறது. இதனால் இந்த இணையதளத்தை முழுமையாக தடை செய்ய முடியாமல் அரசாங்க இயந்திரமே தடுமாறி நிற்பதுதான் நிஜம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் புதிய முகவரிகள் வேகமாக பறிமாறப்பட்டுவிடுகின்றன. தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் அநியாய விலை, பார்க்கிங் கட்டணம் முதல் பாப் கார்ன் வரை தியேட்டர்காரர்களின் கொள்ளை ஆகியவற்றை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

தியேட்டர்களில் நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது சரி! அதை வைத்து தமிழ் ராக்கர்ஸை நியாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமாகாது. இதற்கு எப்போது முடிவு வருமோ?

சினிமாத் துறை இதற்கு ஒரு முடிவு கட்டும் வரை ரசிகர்கள் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் முகவரியை தேடுவது நிற்காது போலவே தெரிகிறது.

 

Madras Rockers Tamil Rockers Isaimini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment