Advertisment
Presenting Partner
Desktop GIF

டப்பிங் யூனியன் தேர்தலில் ராதாரவியை எதிர்க்கும் சின்மயி : இருதரப்பு மோதலால் பரபரப்பு

Chinmayi Vs Radharavi : டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக ‘மீ டூ’ விவகாரத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chinmayi Vs Radharavi

Chinmayi Vs Radharavi

Dubbing Union Election : டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் மீண்டும் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் பாடகி சின்மயி போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு வந்தார் சின்மயி.

Advertisment

பட்ஜெட் 2020: இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக ‘மீ டூ’ விவகாரத்தின் போது தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என அப்போது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி

ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, டப்பிங் யூனியனில் தன்னை நீக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார். இருந்தும் தன்னுடைய பெயர் டப்பிங் யூனியனில் சேர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். எந்தக் காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் குறிப்பிட்டார்.

Chinmayi Radharavi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment