scorecardresearch

பட்ஜெட் 2020: ‘குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது’ – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய, பட்ஜெட்டில் ஏதேனும் மகிழ்ச்சியான செய்தி இருக்குமா என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Budget 2020, President Ramnath Kovind Speech at Parliament
President Ramnath Kovind Speech at Parliament

Budget 2020 : பட்ஜெட் தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினர்.

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்’ என்ற குறளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.

’சம்பள நேரமா பாத்து இப்படி பண்ணிட்டாங்களே’: இன்றும் நாளையும் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

“நமது அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், சவுதி அரேபியா ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து உள்ளனர். ஹஜ் பயண முழு செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியா ஆகும்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஏழை மக்களுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

குற்றங்கள் குறைய அரசு சட்டங்கள் இயற்றி உள்ளது. சீட்டு மோசடியில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒரு சாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது.

மத்திய அரசு ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.

மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கின்றன”

என்று குறிப்பிட்டார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி

குடியுரிமை திருத்த சட்டத்தை சிறப்பு மிக்க சட்டம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Budget 2020 president ramnath kovind speech parliament

Best of Express