/tamil-ie/media/media_files/uploads/2020/01/Chithi-2-serial-review.jpg)
sun tv serial chithi
1st Episode of Chithi 2 Serial : தற்போது நூற்றுக் கணக்கான தொலைக்காட்சித் தொடர்கள், தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடி 90-களின் இறுதியில் ஒளிபரப்பான ‘சித்தி’ சீரியல் தான். ஒட்டு மொத்த குடும்பத்தையும் தொலைக்காட்சி முன்பு அமர வைத்து, சுவாரஸ்யமான அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுத்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவின் உதவியை நாடுகிறது சீனா
இந்நிலையில் சித்தியின் அடுத்த பாகமான, சித்தி 2 நேற்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. 22 வருடங்களுக்கு முன்பு நாம் கேட்ட அதே டைட்டில் பாடல், ஆனால் புதிய காட்சிகளுடன். அந்தப் பாடலே ரசிகர்கள் அனைவரையும் 22 வருடம் பின்னோக்கி நகரச் செய்து, ’நாஸ்டால்ஜியா’ ஃபீலை கொண்டு வந்தது. ராதிகாவுக்கு மாலை போட்டு யானை வரவேற்றது. சித்தியை நினைவுப் படுத்தும் விதமாக, சித்தி 2-வின் முதல் நாளில் நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தன.
மோடிக்கு பிறகு ”மேன் Vs வைல்ட்” நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்!
ஃ பிளாஷ்பேக்கில் ராதிகாவின் அக்காவாக நடிகை ரூபிணி நடித்திருந்தார். முதல் நாள் என்பதாலோ என்னவோ, சித்தி 2 சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகியும், ராதிகாவுக்கு அவ்வளாவாக வசனம் இல்லாமல் இருந்தது. அவர் டீச்சராக நடிப்பதால், வரும் எபிசோட்களில் ராதிகாவின் கதாபாத்திரத்தின் அழுத்தம் கூடும் எனத் தெரிகிறது. முதல் நாளே திரைப்படம் போல, கெத்து காட்டியதால் சன் டிவி சீரியல்களுக்கு சிறிது பிரேக் விட்டிருந்தவர்கள், தற்போது மீண்டும் அந்த சேனலுக்கு தாவியிருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.