Superstar Rajinikanth: பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு, டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பியர் கிரில்ஸின் ”மேன் Vs வைல்ட்” நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதன் படபிடிப்பு கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்து வருகிறது. இதனை ரஜினிகாந்தியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதிப்படுத்தினார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? பர்த்டே பேபி ஷ்ருதி ஹாசனின் சிறு வயது படங்கள்!
பந்திப்பூர் ரிசர்வ் பகுதியில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய ரஜினிகாந்த் இன்று இரவு சென்னை திரும்புவதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள நாங்கள் டிஸ்கவரி சேனலை அணுகினோம், ஆனால் மேற்படி எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் கலந்து கொண்டு பேர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
இது குறித்து பிரதமர் மோடி, “என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதையும் உலகளவில் காட்சிப் படுத்துவதற்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்திருந்தார்.
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் குட்டி ஜெயலலிதா! கைதட்டல்களால் அதிர்ந்த அரங்கம்!
இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நிகழ்ச்சியான மேன் வர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கு, ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.