கோடீஸ்வரி நிகழ்ச்சியில் குட்டி ஜெயலலிதா! கைதட்டல்களால் அதிர்ந்த அரங்கம்!

”மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று அப்படியே ஜெயலலிதா டோனில் பேசிக் காண்பித்தார் அனுஷ்யா.

By: January 28, 2020, 12:16:33 PM

Colors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பெண்களுக்காக மட்டும் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் முகென் ராவின் தந்தை திடீர் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்…

போட்டியாளர்களிடம் உரையாடும் போது, அவர்களது தனிப்பட்ட விருப்பங்களையும், லட்சியத்தையும் கேட்டுத் தெரிந்துக் கொள்வார் ராதிகா. அந்த வகையில் சமீபத்தில் கலந்துக் கொண்ட அனுஷ்யாவின் எதிர்கால திட்டத்தைக் கேட்டு வாயடைத்துப் போனார் ராதிகா. நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் நான் அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்றார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அனுஷ்யா.

ஆறுமுகச்சாமி கமிஷன் மாதிரி நை நை-ன்னு கேள்வி கேட்டுகிட்டு…’ சிசிடிவி கேள்விக்கு சூடான உதயநிதி

உடனே உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி யார் என்று கேட்டார் ராதிகா. அதற்கு, ஜெயலலிதா என்று புன்னகையுடன் கூறினார் அனுஷ்யா. ஏன் என்று கேட்டதற்கு, அவரது தைரியம், போல்ட்னஸ், ஆளுமை எல்லாமே பிடிக்கும் என்றார் அனுஷ்யா. அவங்களுடையே பேமஸ் டயலாக் இருக்குமே என்று ராதிகா கேட்டதும், ”மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று அப்படியே ஜெயலலிதா டோனில் பேசிக் காண்பித்தார் அனுஷ்யா. அப்போது அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களால் நிரம்பி வழிந்தது. உடனே ராதிகா, செய்வீர்களா என்று கேட்க, “நீங்கள் செய்வீர்களா” என ஒற்றை விரலை உயர்த்திக் கேட்டார் அனுஷ்யா.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Colors kodeeswari jayalalithaa dialogue radikaa sarathkumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X