Advertisment

பல குடும்பங்களின் சொந்த வீடு கனவை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்த சித்தி 2

நிம்மதியா வாழ ஒரு வீடு வேணுமோ இல்லையோ. குறைந்த பட்சம் நிம்மதியா சாக ஒரு வீடு வேணும்’ என கண்ணீர் விட்டபடி சாரதா சொன்னபோது பார்வையாளர்களின் கண்களும் ஈரமானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chithi 2 serial, radhika sarathkumar, coronavirus lockdown, serial re telecast, sun tv

chithi serial part 2, chithi serial cast, sun tv serial, சித்தி 2 சீரியல், சன் டிவி சீரியல், ராதிகா சரத்குமார்

Chithi 2 Serial : 90’ஸ் கிட்ஸ்களின் பசுமையான நிகழ்வுகளில் இருந்து நீங்கா இடம் பிடித்திருக்கும் பல விஷயங்களுள் ‘சித்தி’ சீரியலும் ஒன்று. தற்போது இதன் இரண்டாம் பாகமான சித்தி 2 சன் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Advertisment

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரிக்கை செய்த மருத்துவர் மரணம்… சோகத்தில் சீனா!

சாரதா டீச்சராக வரும் ராதிகாவுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. இதனால் சன் தொலைக்காட்சியின் சார்பில் சமுத்திரக்கனி, ராதிகாவை பேட்டி எடுக்க வருகிறார்.’பெஸ்ட் டீச்சராக அவார்ட் வாங்கி இருக்கிறீர்கள்,. அப்படியானால் நீங்கள் நன்றாக படித்து இருக்க வேண்டுமே’ என சமுத்திரக்கனி கேட்க, இல்லை.. ’நான் ஃபெயிலாயிட்டேன்’ என்கிறார் சாரதா.

’இழந்தவங்களுக்குத்தான் அந்த வலி தெரியும். நான் ஃபெயிலான உடனேதான் வைராக்கியம் வந்துடுச்சி. அந்த வலியில் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். டீச்சராக்கணும்னு கனவோடு படிச்சேன். அதைத் தவிர, கனவுன்னு கேட்டா, ஒரு வீடு கட்டணும்.. அதுதான் லட்சியம்’ என்கிறார். வலியைப் பற்றிக் கேட்டால் கனவை சொல்கிறீர்கள். அந்த கனவுக்குப் பிறகு ஏதாவது வலி இருந்ததா என்கிறார் சமுத்திரக்கனி.

அதற்கு, ‘சென்னைக்கு வந்தப்ப என் மாமனாரும் எங்கக் கூட வந்தார். ரொம்ப பாசமா இருப்பாரு. திடீர்னு ஒருநாள் அவர் எதிர்பார்க்காத விதமா இறந்துட்டார். அப்போ ஹவுஸ் ஓனர் வந்து பிணத்தை ரோட்டில் வச்சுக்கங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. வேற வழி இல்லாம, ரோட்ல வச்சுத்தான் அவருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியங்களை செஞ்சோம்’ என்கிறார்.

மனதை புண்படுத்திய வார்த்தைகள் : ’செம்பருத்தி’ சீரியல் இயக்குநர் மீது துணை நடிகைகள் புகார்

சமுத்திரக்கனியுடனான நேர்க்காணலை தொடரும் சாரதா, “அப்போதுதான் நினைச்சேன், நிம்மதியா வாழ ஒரு வீடு வேணுமோ இல்லையோ. குறைந்த பட்சம் நிம்மதியா சாக ஒரு வீடு வேணும்’ என கண்ணீர் விட்டபடி சாரதா சொன்னபோது பார்வையாளர்களின் கண்களும் ஈரமானது. காரணம் பல குடும்பங்களில் சொந்த வீடு என்பதே பெருங்கனவாக உள்ளது. சராசரி குடும்பங்களின் தேவைகளை இயல்பாக சொல்லும் காரணத்தினால், சித்தி 2 பார்வையாளர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment