கொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரிக்கை செய்த மருத்துவர் மரணம்… சோகத்தில் சீனா!

தங்களின் உயிர் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து மருத்துவ சேவை புரிந்து வரும் மருத்துவ ஊழியர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

By: Updated: February 8, 2020, 11:50:54 AM

Coronavirus doctor Li Wenliang passed away : கொரோனா வைரஸ் பரவல் குறித்து முதன் முறையாக எச்சரிக்கை செய்தவர் டாக்டர் லி வென்லியாங்க். 34 வயதான இந்த சீன மருத்துவர் கொரோனா வைரஸின் தீவிர நிலை குறித்து டிசம்பர் மாதமே எச்சரிக்கை செய்தார். இது தொடர்பாக டிசம்பர் 30ம் தேதி சமூக வலைதளங்களில் முக்கியமான போஸ்ட் ஒன்றையும் அவர் பதிவு செய்திருந்தார். ஆனால் வுஹான் சுகாதரத்துறை இவரின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு சம்மனும் அனுப்பியது.

மேலும் படிக்க : 328 நாட்கள் விண்வெளியில் சாகசம்… பூமி திரும்பினார் க்றிஸ்டினா கோச்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் மொத்த சீனாவும், ஏன் உலகமுமே பதட்டமான சூழலில் இருக்கிறது. இந்த நோய்க்கு எப்போது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் மக்கள் மத்தியில் இருந்தால் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவும். அதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிக அளவு அக்கறையும் கவனமும் தேவைப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாக கூடியவர்களாக இருக்கின்றார்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்.

இது போன்ற நிலையில் தான் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த வண்ணம் இருந்தார் மருத்துவர் லி வென்லியாங். இறுதியாக இவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட இவரும் உயிரிழந்தார். இன்று சீன மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இந்த டாக்டருக்கும், தங்களின் உயிர் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து மருத்துவ சேவை புரிந்து வரும் மருத்துவ ஊழியர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus doctor li wenliang passed away widespread outcry in china

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X