இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தப் படத்தை நடிகர் விக்ரமை வைத்து இயக்குவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ப்ராமிஸிங் கண்டெண்ட்: கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ டீசர்!
“ஜாகமே தந்திரம் படத்திற்குப் பிறகு எனது அடுத்தப் படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி…. ‘CHIYAAN60’ அற்புதமான சியான் விக்ரம் சார் & துருவ் விக்ரம் நடிக்கும் படம். மேலும் இது அனிருத்தின் இசையில் இருக்கும்.. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில், லலித் குமார் தயாரிக்கிறார்” என்று கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்தப் படத்திற்கான போஸ்டரையும் பகிர்ந்துக் கொண்டார். போஸ்டரை வைத்துப் பார்க்கும் போது இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது.
Happy to announce that my next directorial after #JagameThandhiram is…. ‘CHIYAAN60’#Chiyaan60
Starring the awesome Chiyaan Vikram Sir & Dhruv Vikram…
And it will be an @anirudhofficial musical..
Produced by @Lalit_SevenScr @7screenstudio
So excited for this film…. pic.twitter.com/Oof0je5Eg4
— karthik subbaraj (@karthiksubbaraj) June 8, 2020
’சியான் 60’ தந்தை மற்றும் மகன் ஜோடியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல் திரைப்படமாக இருக்கும். விக்ரமின் 60-வது படமான இதில், அவரது மகன் துருவ் முதன்முறையாக தந்தையுடன் இணைகிறார். தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக், ’ஆதித்யா வர்மா’ படம் மூலம் கடந்த ஆண்டு வெள்ளித்திரையில் அறிமுகமானார் துருவ். சியான் 60 அவரது இரண்டாவது படம்.
கார்த்திக் சுப்பராஜ் தற்போது தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், ’ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறந்ததும் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடும் ’பென்குயின்’ படத்தையும் கார்த்திக் தயாரித்துள்ளார்.
டிவி பிரபலம் வரதராஜன் மீது கைது நடவடிக்கையா? 4 பிரிவுகளில் வழக்கு
தவிர, புராண நாடகமான ’மகாவீர் கர்ணன்’, ஸ்பை-திரில்லர் படமான ’துருவ நட்சத்திரம்’ ஆகியப் படங்கள் தற்போது விக்ரம் கைவசம் உள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Chiyaan 60 vikram dhruv vikram karthik subbaraj
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி