Advertisment

டிவி பிரபலம் வரதராஜன் மீது கைது நடவடிக்கையா? 4 பிரிவுகளில் வழக்கு

வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
t.v varadarajan video

t.v varadarajan video

t.v varadarajan video : பிரபல தொலைக்காட்சி நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரதராஜனிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

t.v varadarajan video : என்ன பேசினார் வரதராஜன்?

நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் தன்னுடைய நண்பருக்கு நேர்ந்த அதிர்ச்சி நிறைந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்தபோது, எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை,மருத்துவமனை நிர்வாகிகள், ஓனர், எம்டி வரை தான் முயற்சித்தும் எந்த உதவியும் தனக்கு கிடைக்கவில்லை.

மிகவும் சிரமப்பட்டோம்.சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்கிறார்கள். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். அதில்,”சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகள் 5000 படுக்கை வசதிகள் இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து வசதிகளும் உள்ளது. படுக்கைகள் நிரம்பி விட்டதாக செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வதந்தி பரப்பும் வகையில் பேசியுள்ளார்.

ரத்த அழுத்தம், இதய செயல்பாடு சீராக இல்லை: ஜெ.அன்பழகன் ஹெல்த் ரிப்போர்ட்

பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிட்டதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், வரதராஜன் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamilnadu Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment