காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு அழைப்பில், நடிகர் விக்ரமின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தப்பட்டது.
கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை காலை இந்த அழைப்பு வந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டுப்பாட்டு அறையின் ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளையும் திருவன்மியூர் போலீசாரையும் எச்சரித்தனர். பின்னர் ஒரு ரோந்து குழு பெசன்ட் நகரில் அமைந்துள்ள விக்ரமின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணைகளை நடத்தியது. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவின் (பி.டி.டி.எஸ்) பணியாளர்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன?
வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, பி.டி.டி.எஸ் இந்த அழைப்பை ஒரு புரளி என்று அறிவித்தது. அதன் பிறகு ஃபோன் செய்தவர்களை கண்டுப்பிடிக்கும்படி, கட்டுப்பாட்டு அறையிடம் கேட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து இந்த அழைப்பு வந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் வீடுகளுக்கும், இதேபோன்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளதால், போலீசார் இந்த சம்பவம் குறித்து சந்தேகிக்கின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”