/tamil-ie/media/media_files/uploads/2020/06/Untitled-design-9.png)
choreographer Gayathri Raguram's Yaadhumaagi Nindrai's official trailer got released
choreographer Gayathri Raguram's Yaadhumaagi Nindraai: சினிமாவில் கால்தடம் பதித்து அதில் நிலைத்து நிற்பது என்பது அனைவருக்கும் சாத்தியமாகாத ஒன்று. விடாமுயற்சி, சிபாரிசு, துயரங்களை தாங்கும் சக்தி எல்லாம் இருந்தால் தான் எந்த கனவுக்குமே பலன் கிடைக்கும். சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரகுராம். தமிழ் சினிமா நன்கு அறிந்த பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள் இவர்.
மேலும் படிக்க : சுஷாந்த் மரணம் : புறக்கணிக்கப்படும் திறமை! வாரிசு நடிகர்களால் திணறும் B-டவுன்!
சினிமாவில் தன்னை ஒரு நடிகையாக நிலை நிறுத்திக் கொள்ளாமல், நடன இயக்குநாரகாவும் பணியாற்றினார். தற்போது ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே இப்படத்தின் கதை. இந்த படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் தானே நடித்து, இப்படத்தை இயக்கியும் உள்ளார் காயத்ரி ரகுராம்.
கொரோனா தொற்று காரணமாக படங்கள் வெளியீடு என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற நேரத்தில் நேரடியாக ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. ப்ளாட்ஃபார்மில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜூன் 19ம் தேதி அன்று வெளியாக உள்ளது. அதே நேரத்தில் தான் அமேசான் ப்ரைமில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் படமும் வெளியாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.