Advertisment

பிரபல கன்னட நடிகர் மறைவு.. கடைசி விவசாயி படத்தை புகழ்ந்த பிரபல இயக்குநர்… மேலும் செய்திகள்

மூச்சுவிட சிரமம் இருப்பதாகக் கூறி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 8 நாட்களுக்கு மேலாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

author-image
WebDesk
New Update
பிரபல கன்னட நடிகர் மறைவு.. கடைசி விவசாயி படத்தை புகழ்ந்த பிரபல இயக்குநர்… மேலும் செய்திகள்

கன்னட நடிகர் ராஜேஷ் மறைவு

Advertisment

பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

மூச்சுவிட சிரமம் இருப்பதாகக் கூறி பெங்களூரில் உள்ள தனியார் மருத்துமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 8 நாட்களுக்கு மேலாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இவரது மனைவியும் அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்து இவர் 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கர்நாடக பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

இவருக்கு நிவேதிதா என்ற மகள் உள்ளார்.  இவரை தான் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் திருமணம் செய்து கொண்டார்.

100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம்

காக்கமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்தது. இந்தப் படத்தை பற்றி பேசி யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று கடைசி விவசாயி படத்தை சொல்வேன்.  நானும் ஒரு பத்து படங்களை எடுத்துள்ளேன். இவை அனைத்தையும் விட கடைசி விவசாயி மிகச் சிறந்த படம் என்று சொல்வேன்.  இந்த படத்தையும், இந்த படத்தை இயக்கிய எம்.மணிகண்டனை கொண்டாடவில்லை என்றால் நமக்குள் எந்த ஆன்மீக தன்மையும் இல்லை என்று அர்த்தம்.

வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய் ? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த படத்தை நாம் அனைவரும் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டும். இது வாழ்க்கையில் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்று நாம் நம் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்திய மக்களுக்காக, இந்நாட்டு மண்ணுக்காக எடுக்கப்பட்ட படம் இது.

இப்படத்தில் நடித்த முதியவரை பார்க்கும்போது எனக்கு ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் தான் நினைவுக்கு வந்தார். இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கும். இப்படத்தை அனைத்து உதவி இயக்குனர்களும், அனைத்து இயக்குனர்களும் பார்க்க வேண்டும்  என்று மிஷ்கின் அந்த வீடியோவில் தெரிவித்தார்.

இசைப் புயல் வெளியிட்ட பாடல்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை வெளிவராத படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான்,  விக்ரம் நடித்துவரும் கோப்ரா, மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் மற்றும் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் நிழல் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றை கம்போஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் உள்ள பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டதாகவும், இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஹ்மானின் இந்த பதிவிற்கு பெரும்பாலானோர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்கான பாடல் என்று பதிலளித்துள்ளனர்.

போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த நடிகை கைது

ஏக் மினி கதா, ஏ மாய பெரேமிதோ, தமிழில் மார்க்கெட் ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்தி நடிகை காவ்யா தாபர்.

இவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்து மற்றொரு வாகனத்தின் மீது மோதினார். இதையடுத்து ஜூஹு பகுதி காவலர்கள் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.                  

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் காவலரை காவ்யா தாக்கியதாக தெரிகிறது.  

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து அந்தேகரி மாஜிஸ்ட்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பைகுல்லா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையில் இருப்பார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment