தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களையும் பாடல்களையும் கொடுத்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது மெலோடி பாடல்களை இளைஞர்கள் என்றென்றும் கொண்டாடி வருகின்றனர்.
யுவன் திரைத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், துபாயில் 25 ஆண்டு கால இசை பயணத்தை உங்களுடன் (ரசிகர்கள்) கொண்டாடுவதாக யுவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20ஆம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள 'துபாய் எக்ஸ்போ' கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக" டுவிட்டரில் யுவன் பதிவிட்டுள்ளார் .
நடிகர் அஜித்தின் 62ஆவது பட இயக்குநர்?
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-ஆவது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அஜித்குமாரின் 62 -வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக நடித்து அசத்தியிருந்தார்.
தற்போது காட்ஃபாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரும், இயக்கநருமான மோகன் ராஜா இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெறவுள்ளது. சல்மான் கானுக்கு தெலுங்கில் இதுவே முதல் படமாகும்.
இத்தகவலை நடிகர் சிரஞ்சீவி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரபல இயக்குநரை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்
ராம் லீலா, பத்மாவத், கங்குபாய் கதியாவாடி, மாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியை நடிகர் அல்லு அர்ஜுன் சந்தித்தார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் அகில இந்திய அளவில் புகழ் பெற்றார். இந்நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியை அவரது அலுவலகத்தில் அல்லு அர்ஜுன் சந்தித்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் புதிய படத்தில் இணையும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம் கிடுகிடு உயர்வு… சன் டி.வி டாப் சீரியல் நடிகை ‘கயல்’ எவ்ளோ வாங்குறாங்க தெரியுமா?
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கங்குபாய் படம் சமீபத்தில் வெளியானது. இது இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“