நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், மாஃபியா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படித்தில் நடித்துள்ளார் தனுஷ்.
இந்தப் படத்தில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தனுஷுக்கு பத்திரிகையாளர் வேடம். சமுத்திரகனி வில்லனாக நடித்துள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது.
தற்போது மாறன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ரீமேக் பாடல் செய்த சாதனை!
திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக கலக்கி வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் டிக்கிலோனா.
டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரீமேக் பாடல்களுக்கு தற்போது மவுஸ் கூடி வருவதால் இந்தப் படத்திலும் ஒரு ரீமேக் பாடல் இடம்பெற்றது.
இந்த படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது தந்தை இளையராஜா இசையமைத்து இருந்த பேர் வச்சாலும் என்ற பாடலை ரீமேக் செய்து தனது ஸ்டைலில் உருவாக்கியிருந்தார்.
இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், படம் வெளியான சமயத்தில் இந்த பாடலானது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், இந்த பாடலானது யூ டியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் மைக்கோல் மதன காமராஜன் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர் பாடியிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தி படத்தை தயாரிக்கும் லேடி சூப்பர்ஸ்டார்
அறம், விஸ்வாசம், ஐரா என தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்து வரும் நயன்தாரா குஜராத்தி மொழி படத்தை தயாரிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.
நயன்தாரா தயாரித்த கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது.
இந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு விருது பெறாமல் திரும்பியது. தற்போது இந்தி பட உலகிலும் நயன்தாரா அறிமுகமாகி உள்ளார். அட்லி இயக்கும் லயன் இந்தி படத்தில் ஷாருக்கானுடன் நடிக்கிறார். அடுத்து குஜராத்தி சினிமாவிலும் கால்பதிக்கிறார்.
காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து குஜராத்தி மொழி படமொன்றை தயாரிக்க இருக்கிறார்.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சைனி டைரக்டு செய்கிறார்.

இதில் மல்ஹர் தக்கார், மோனல் கஜார் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு சுப் யாத்ரா என்று பெயர் வைத்துள்ளனர்.
மகாசிவராத்திரி: பிரபலங்கள் வாழ்த்து
மகாசிவராத்தியையொட்டி (மார்ச் 1) பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவாலயங்களில் இன்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஷிவாய் படத்தில் நடித்த பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன், ஓம் நம சிவாய என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மல்லிகா அரோரா இனிய மகா சிவராத்திரி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
நடிகை சோனம் கபூர், இன்ஸ்டாகிராமில் சிவன் புகைப்படத்தை பதிவேற்றி சிவராத்திரி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பல்வேறு பாலிவுட் திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அலியா பட்டை பாராட்டிய பிரபல நடிகர்
பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி படம் சமீபத்தில் வெளியானது.
இந்தப் படத்தில் மாஃபியா ராணியாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார் அலியா பட்.
என்ன பாரதி சார் ரொம்பத்தான் அக்கறை…! ஆனா கண்ணம்மா ரொம்ப ஹேப்பி
பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்துக்கான கதை உருவாக்கப்பட்டது.

இந்தப் படத்தில் உங்களது நடிப்பை பார்த்து வியந்தேன் என்று சக நடிகர் வருண் தவான் பாராட்டி உள்ளார்.
பத்ரிநாத் கி துல்ஹானியா, கலங்க், ஸ்டுடன்ட் ஆஃப் த இயர் ஆகிய படங்களில் வருண் தவானுடன் அலியா பட் இணைந்து நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami