scorecardresearch

டுவிட்டரில் இணைந்த பிரபல இயக்குநர்.. ராஜமவுலி அடுத்த படத்தின் பட்ஜெட்.. மேலும் செய்திகள்

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன். இவர் சமீபத்தில் ருத்ரா த எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.

டுவிட்டரில் இணைந்த பிரபல இயக்குநர்.. ராஜமவுலி அடுத்த படத்தின் பட்ஜெட்.. மேலும் செய்திகள்

இயக்குனர் சுதா கொங்கரா, கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகளில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா, டுவிட்டரில் இணைந்துள்ளார். தன்னுடைய அதிகார்ப்பூர்வ டுவிட்டர் கணக்கை நேற்று தொடங்கியுள்ளார். கணக்கை தொடங்கிய அவர் முதல் பதிவாக, ‘வணக்கம். இது என்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு’ என்று பதிவிட்டுள்ளார்.

இவர் இயக்கிய ஸ்போர்ட்ஸ் படமான இறுதிச்சுற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கும் நிவேதிதா

வக்கீஸ் சாப் படத்தில் துணிச்சலான முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த நிவேதிதா தாமஸ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், தர்பார் படத்தில் நடித்திருந்தார். கேரளவைச் சேர்ந்தவர் என்றாலும் மலையாளத்தில் அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். எந்தாடா ஷாஜி என்ற படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன் ஆகியோர் இந்தப் படத்தில் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராஜமவுலியின் மெகா பட்ஜெட் படம்

பாகுபலி படத்தின் 2 பாகங்களை இயக்கி ஒட்டுமொத்த சர்வதேச திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளன்ர.

இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.200 கோடியைக் கடந்தது. ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இவரது அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு நடிக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்: நீங்க பெரிய கில்லாடி கோபி… இனியாவே உங்களுக்கு சப்போர்ட் பண்றங்களே…!

பிரபல நடிகரின் பிறந்த நாள்: வித்தியாசமாக வாழ்த்து கூறிய மனைவி

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜய் தேவ்கன். இவர் சமீபத்தில் ருத்ரா த எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார்.

அவரது மனைவி பாலிவுட் நடிகையான கஜோல். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ஆம் பாகத்தில் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

கணவரின் பிறந்த தினத்தையொட்டி ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். குடி படவா என்ற பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். குடி படவா மராத்தியர்களின் பண்டிகைகளில் ஒன்றாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema round up entertainment stories interesting news