scorecardresearch

பிரதமர் பாராட்டிய படத்தை புகழ்ந்த கங்கனா.. ரஜினி மகள் படத்தில் லாரன்ஸ்?.. மேலும் செய்திகள்

அலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடி வசூல் சாதனையும் படைத்தது.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் குறித்து இந்தி திரையுலகினர் கருத்து தெரிவிக்காமல் இருப்பதாக கங்கனா ரணாவத் சாடி உள்ளார்.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் பண்டிட்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிய சம்பவங்களை வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் அக்னிகோத்ரி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில், படம் குறித்து இந்தி திரையுலகினர் கருத்து தெரிவிக்காமல் இருப்பதாக கங்கனா ரணாவத் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பாக இந்தி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். படம் கட்டுக்கதையை தகர்த்துள்ளது. இந்த படம் குறித்து இந்தி திரையுலகினர் அமைதியை கடைப்பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்த வருடத்தின் பெரிய வெற்றி படமாக இது இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் லாரன்ஸ்?

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது, முசாபிர் என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்சும், ஐஸ்வர்யாவும் திடீரென்று சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அன்பான அண்ணன் லாரன்சை சந்தித்த பிறகு எனது மூளை இன்னும் வேகமாக செயல்படு கிறது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
இதுகுறித்து லாரன்ஸ் கூறுகையில், நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை பாச உணர்வில் சந்தித்தோம்.

தொழில் ரீதியிலான சந்திப்பாகவும் இது அமைந்தது. இந்த சந்திப்பில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அதை ஐஸ்வர்யா ஒரு வாரத்தில் அறிவிப்பார் என்று கூறினார்.

அலியா பட்டுக்கு கொடுத்த சர்பிரைஸ்

பாலிவுட் நடிகை அலியா பட்டின் பிறந்த தினத்தையொட்டி, அவரது நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாஸ்திரா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அலியா பட் நடிப்பில் கங்குபாய் கதியாவாடி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரூ.100 கோடி வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில், தனது 29-ஆவது பிறந்த நாளை அலியா பட் இன்று கொண்டாடுகிறார்.

அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காதலருடன் இணைந்து அலியா பட் இணைந்து நடித்துவரும் பிரம்மாஸ்திரா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

சீரியலில் இருந்து விலகிய ஆல்யா மானசா… அடுத்த சந்தியா யார்?

நடிகர் பிரபாஸ் படம் சரியில்லை என விரக்தியில் ரசிகர் தற்கொலை?

பாகுபலி படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் வெளியானது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கை ரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார்.

படத்துக்கு கவலையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இந்த விமர்சனங்களை படித்து விரக்தி அடைந்த 24 வயது இளைஞரான ரவி தேஜா தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema round up entertainment stories ragava lawrance