விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமன்றி மற்ற முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசி விவசாயி படம் கடந்த மாதம் வெளியானது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
நடிகர் விஜய் உடன் வில்லனாக மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் அசத்தினார்.
இந்நிலையில், அடுத்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிஸ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்து இருக்கிறார்.
பாவனாவுக்கு கெளரவம்
கேரளாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பாவனா கவுரவிக்கப்பட்டார்.
இவர் மேடை ஏறியபோது மாநில அமைச்சர்கள் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாவனாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் பாவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். கேரள கலாசாரத் துறை மந்திரி ஷாஜி செரியன் பேசும்போது “கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்" என்று பாவனாவை புகழ்ந்தார்.
இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகை பார்வதி இந்த வீடியோவை பகிர்ந்து, "வெல்கம் பேக் பாவனா. இந்த இடம் உங்களுக்கானது" என்று குறிப்பிட்டு உள்ளார்.
உக்ரைன் பாதுகாவலருக்கு உதவிய தெலுங்கு நடிகர் ராம்சரண்
ஆர்.ஆர்.ஆர். படத்தின், சில காட்சிகள் உக்ரைனில் படமாக்கப்பட்டபோது ரஷ்டி என்பவர் ராம்சரணுக்குப் பாதுகாவலராக இருந்துள்ளார்.
போர் நடந்து வரும் சூழ்நிலையில் ரஷ்டிக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ராம்சரண் அனுப்பி இருக்கிறார்.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகி ராம்சரணின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்
சமந்தாவின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் யசோதா படத்தில் நடித்து வருகிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.
ஹரி மற்றும், ஹரிஷ் இணைந்து இயக்க, திகில் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் சமந்தா அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்கிறார்.
சுந்தரி கேப்ரில்லா லேட்டஸ்ட் வீடியோ: எப்படி இருந்த அவர் இப்படி மாறிட்டார்!
சமந்தாவின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil