scorecardresearch

சுந்தரி கேப்ரில்லா லேட்டஸ்ட் வீடியோ: எப்படி இருந்த அவர் இப்படி மாறிட்டார்!

சிறுவயது முதல் தற்போது வயது வரையிலான அழகிய புகைப்பட தொகுப்பு; சுந்தரி சீரியல் கேப்ரில்லா வைரல் வீடியோ

Sundari serial Gabriella viral video: ’என்னை உருவாக்குவதில் எனது பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கிய பயணம் இது’ என தனது சிறுவயது முதல் தற்போது வரையிலான புகைப்படங்களை அழகான தொகுப்பாக சுந்தரி சீரியல் நாயகி கேப்ரில்லா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது சின்னத்திரையில் பலர் ஜொலித்துக் கொண்டிக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் கேப்ரில்லா. இவர் சன் டிவியின் முக்கிய சீரியலான சுந்தரியில் நாயகியாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரில்லா. பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட கேப்ரில்லா, குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில், சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. தற்போது சில படங்களில் நடித்து வரும் கேப்ரியல்லா. சன் டிவியின் சுந்தரி சீரியலில் நாயகியாகவும் நடித்து வருகிறார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கேப்ரில்லா சேர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்த் ஃபேமிலிக்கு இது மறக்க முடியாத நாள்… ஐஸ்வர்யா சொன்ன சீக்ரெட்!

சுந்தரி சீரியலில், கருப்பு நிறப்பெண், நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஐஏஎஸ் ஆக போராடும் சுந்தரி கதாப்பாத்திரத்தில் கேப்ரியல்லா நடித்து வருகிறார்.

சீரியலில் பிஸியான நடிகையாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் கேப்ரில்லா. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்வதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்தநிலையில் கேப்ரில்லா தனது சிறு வயது முதல் தற்போது உள்ள தோற்றம் வரையிலான அழகிய புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘என்னை உருவாக்குவதில் எனது பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கிய பயணம் இது‘ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sundari serial gabriella viral video