scorecardresearch

டிரெய்லரை பார்த்துட்டு இப்படியொரு கமென்ட்.. மாறுபட்ட போலீஸ் கதையில் விக்ரம் பிரபு.. மேலும் செய்திகள்

அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எனினும், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பெரிய அளவில் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்த்தது பொய்யானது.

டிரெய்லரை பார்த்துட்டு இப்படியொரு கமென்ட்.. மாறுபட்ட போலீஸ் கதையில் விக்ரம் பிரபு.. மேலும் செய்திகள்

நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.
துப்பாக்கி, தெறி, பிகில், மெர்சல், மாஸ்டர் என அவர் தேர்வு செய்து வரும் கதைகள் அனைத்து ஹிட் அடித்து வருகிறது.

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சனின் அடுத்த படம் தான் பீஸ்ட்.

இந்தப் படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்துள்ளது டிரெய்லரை பார்க்கும்போது தெரிய வருகிறது.
துப்பாக்கிப் படத்திலும் இதேபோன்ற வேடத்தைதான் எடுத்து நடித்தார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் கமென்ட்டில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ரசிகர் ஒருவர் பீஸ்ட் பெயருக்கு அவர் பாணியில் விளக்கம் கொடுத்துள்ளார். BEAST- பெஸ்ட் எவர் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் தளபதி என்று அதற்கு அவர் வித்தியாசமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

மாறுபட்ட போலீஸ் கதையில் விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு சமீப காலமாக நல்ல வெற்றி கிடைக்காமல் காத்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் டாணாக்காரன் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது.
படத்தின் டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

போலீஸ் ஆகத் துடிக்கும் இளைஞர்களின் கதையை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் தமிழ்.

தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது.
படத்துக்கு இசை ஜிப்ரான். வலிமை படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை பேசப்பட்டது.

கலையரசனின் புதிய படம்

நடிகர் கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கி உள்ளார்.

இவர் பாலா, சுதா கொங்கரா, பாலாஜி மோகன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்த படத்தில் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

முதலில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது மே 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் கலையரசன் நடிப்பில் குதிரைவால் திரைப்படம் வெளியானது. இது மேஜிக் ரியாலிசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். கலவையான விமர்சனங்களை இந்தப் படம் எதிர்கொண்டு வருகிறது.

எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்த இயக்குனர் ஷங்கர்: அங்கே விஜய் போட்டோவை பார்த்து..?

ஆர்ஆர்ஆர் படத்துக்கு டஃப் கொடுக்குமா அட்டாக்

பாலிவுட் முன்னணி நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் அட்டாக் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
எனினும், ஆர்ஆர்ஆர் படத்துக்கு பெரிய அளவில் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்த்தது பொய்யானது.

ஆம். இந்தப் படத்தின் ரிலீஸால் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை.
ஆர்ஆர்ஆர் படம் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியானது.

இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன், நடிகை அலியா பட் ஆகியோரும் நடித்திருந்தனர். பல கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து வருகிறது ஆர்ஆர்ஆர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema roundup entertainment roundup bollywood and kollywood