scorecardresearch

இந்த நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. நடிகர் கார்த்தியின் சுவாரசிய ட்வீட்.. மேலும் செய்திகள்

இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்துள்ளனர். விரைவில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. நடிகர் கார்த்தியின் சுவாரசிய ட்வீட்.. மேலும் செய்திகள்

ரெக்கார்டை முறியடித்த பீஸ்ட்

இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் பட ட்ரைலர் முறியடித்துள்ளது. பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது.

ஏற்கனவே, நடிகர் அஜித் நடித்த வலிமை ட்ரைலரின் மொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் ஒரு நாளுக்குள் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இதனிடையே தற்போது வரை யூடியூப் தளத்தில் 2.4 மில்லியன் லைக்ஸ் மற்றும் 33 மில்லியன் பார்வைகளை பீஸ்ட் ட்ரெய்லர் கடந்துள்ளது.

நடிகர் கார்த்தியின் சுவாரசிய ட்வீட்

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதையடுத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது ஒரே தேதியில் வெளியான தனது படங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நடிப்பில் வெளியான பையா, கொம்பன், சுல்தான் போன்ற திரைப்படங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகின.

இதுகுறித்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பையா திரைப்படம் எனக்கு முற்றிலும் புதிய கண்ணோட்டத்தைக் வெளிப்படுத்த வித்திட்டது. நான் அறிமுகமாகி 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என்னை கிராமத்துக்கு கொம்பன் திரைப்படம் அழைத்துச் சென்றது. சுல்தான் திரைப்படம் மீண்டும் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியது.

இவை எல்லாமே ஒரே வெளியீட்டுத் தேதியில்தான் ரிலீஸ் ஆனது. இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், அன்பான ரசிகர்களுக்கும் என் நன்றி என்று அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓடிடி தளத்திலும் வலிமை படம் சாதனை

அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தியேட்டர்களில் வெளியானது.
இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வசூலையும் குவித்தது.

ஒரு மாதம் கடந்த நிலையில் ‘வலிமை’ படம் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. ஓ.டி.டி.யில் வெளியான முதல் நாளிலேயே ‘வலிமை’ படம், 100 மில்லியன் நேரலை நிமிடங்களை, அதாவது 10 கோடி நேரலை நிமிடங்களை கடந்திருக்கிறது.

அதேபோல ஒரு வாரத்தில் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை (50 கோடி) கடந்துள்ளது. இதன் மூலம் முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து ‘வலிமை’ படம் புதிய சாதனை செய்து இருப்பதாக சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. இணையதளம் சார்பில் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்த பிரபலத்துக்கு டும் டும் டும்…

பாலிவுட் நடிகர் ரண்பீர் கபூர், நடிகை அலியா பட் ஆகியோரின் திருமணம் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் நடைபெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைவே படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அலியா பட் அதன்பிறகு, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்தார். ரண்பீர் கபூரின் படத்திலும் அவர் ஏற்கனவே நடித்துள்ளார்.
அப்போது அவர்களுக்கு காதல் மலர்ந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதை இருவருமே உறுதிப்படுத்தினர். இவர்களின் திருமணம் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் நடக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா அப்பாவுக்கு பிறந்தநாள்.. விக்னேஷ் சிவன் என்ன பண்ணிருக்காரு பாருங்க!

இருவரும் இணைந்து பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்துள்ளனர். விரைவில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema roundup entertainment roundup bollywood and kollywood

Best of Express