நடிகர் ஜெய், 'குற்றம் குற்றமே' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை திவ்யா துரைசாமி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், பாரதிராஜா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி வருகிற 14-ந்தேதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வீரபாண்டியபுரம் படத்திற்கு பிறகு இயக்குனர் சுசீந்திரனுடன் நடிகர் ஜெய் மீண்டும் இணைந்துள்ளார்.
கதாநாயகனாக சதீஷ்
நடிகர் சதீஷ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'சட்டம் என் கையில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டுவிட்டர் கணக்கில் வெளியிட்டார். நடிகர் ஆர்யாவும் இந்த போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
கிரிக்கெட் வீராங்கனையாக பிரபல நடிகை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை கதையில் பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.
விளையாட்டுத் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் குறித்த திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகிறது.
அந்த வரிசையில் இந்தப் படமும் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிகை டாப்சி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்தான் ஓனர்.. நாங்கெல்லாம் கிளீனர்ஸ்.. விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்ட்ஸ் போன பீஸ்ட் டீம்!
திருமணத்துக்கு பிறகு பெயரை மாற்றிய பிரபல நடிகைகள்
திருமணத்துக்குப் பிறகு சில பிரபல நடிகைகள் தங்களின் கணவரின் பெயரை பின்னால் சேர்த்துக் கொள்வது வழக்கம்.
அப்படி தங்களது பெயருக்கு பின்னால் கணவரின் பெயரை சேர்த்துக் கொண்டு நடிகைகள் பின்வருமாறு..
நடிகை ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், 2007இல் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பிறகு தனது பெயருக்கு பின்னால் பச்சன் என்பதை சேர்த்துக் கொண்டார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸை கரம் பிடித்தார்.
அதன் பிறகு தனது பெயருக்கு பின்னால் கணவரின் பெயரை சேர்த்துக் கொண்டார். இதேபோல் நடிகை சோனம் கபூர், தனது பெயருக்கு பின்னால் கணவர் அஹுஜாவின் பெயரை சேர்த்துக் கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“