Cobra Vikram : 'கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, ’இமைக்கா நொடிகள்’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் அடுத்தப் படத்தில் ஒப்பந்தமானார் நடிகர் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
’கோப்ரா’ படத்தில் ’கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கோப்ரா படத்தில் முதற்கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் நடந்து முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படபிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ளனர் படக்குழுவினர். இந்நிலையில் இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு, மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகின. தற்போது இது போஸ்டரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரமின் 58-வது படமான இது அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. கோப்ரா என டைட்டில் அறிவிக்கப்பட்டதும், அந்த எதிர்பார்ப்பு ரெட்டிப்பானது. படத்தில் விக்ரம் 15 ரோல்களில் நடிப்பதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளிக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கின்றன. உடைந்து சிதறும் கண்ணாடியைப் பார்த்து உரக்க கத்தும் விக்ரம் என ஏழு விதமான கெட்டப்புகளில் காட்சி தருகிறார். சில கெட்டப்புகளில் தமிழ் நிலத்தைக் கடந்த வயது முதிர்ந்த மனிதர்களின் முகசாயலில் அவரது முகம் இருக்கிறது. ஏழு கெட்டப்புகளுடன் வெளியாகியுள்ள ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கோப்ரா படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள், 7 கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கிறாரா? 15 கெட்டப் என்றார்களே, அப்படியெனில் மீதி தோற்றங்கள் அடுத்த போஸ்டரில் வெளியாகுமா என்றெல்லாம் தீவிரமாக யோசித்து வருகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"