Colors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ’கோடீஸ்வரி’ எனும் பெண்களுக்கான பிரத்யேக கேம் ஷோ கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
குளோபல் வார்மிங் பிரச்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல் விரைவில் வெளியீடு!
இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்துக் கொண்டு, தனது திரை அனுபவங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக ரஜினியை அங்கிள் என்றழைத்து, பின்னாட்களில் அத்தான் என்று கூப்பிட்டது, நீண்ட இடைவெளிக்குப் பிறது தற்போது தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருப்பது என பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதோடு ரஜினிக்கு டான்ஸிங் மகாராஜா எனவும், தனக்கு டான்ஸிங் மகாராணி எனவும் பட்டப் பெயர் இருப்பதாகவும் கூறினார். அதோடு தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த ‘யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே’ என்ற பாடலையும் பாடி பார்வையாளர்களை அசத்தினார். அதனைப் பார்க்கும் போது, அடடே..! மீனா இவ்வளவு நன்றாகப் பாடுவாரா என்று எண்ணத் தோன்றுகிறது.
மோடி எங்களை காப்பாற்றுங்கள்! கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்!
அதோடு தனது மகள் நைனிகா தன்னைப் போலவே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானது குறித்தும் பேசிய மீனா, நிஜத்திலும் அவர் ‘தெறி பேபி’ தான் என்றார். இந்நிகழ்ச்சி இன்றிரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil