Thirumanam Serial: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ’திருமணம்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சக்தியை காதலித்துவிட்டு, ஜனனியை திருமணம் செய்துக் கொண்டு தவிக்கும் சந்தோஷின் கதை தான் இந்தத் திருமணம்.
திருமணம் முடிந்த அன்றே சக்தியை காதலிக்கும் விஷயத்தை ஜனனியிடம், சந்தோஷ் சொல்லிவிட, இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்கள். இதற்கிடையே, சக்தி குடும்பத்தோடு மலேசியா போய்விட, ஜனனியும், சந்தோஷும் விவாகரத்துக்காக அலைகிறார்கள். ஆனால், சந்தோஷின் அப்பா, தம்பி, தங்கை ஆகியோருக்கு ஜனனியை ரொம்பப் பிடித்துப் போகிறது. திருமணமாகி 6 மாதம் கடந்த நிலையில், ஜனனி மீது சந்தோஷுக்கு ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த ஈர்ப்பு ஆரம்பத்திலிருந்தே ஜனனியிடம் உள்ளது. அப்போது தான் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டதாக சக்தியிடமிருந்து அழைப்பு வருகிறது.
சந்தோஷுக்காக காத்திருந்த சக்தி, சந்தோஷின் அண்ணி மாயாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி, அவங்க சொல்ற வேலைகளை சந்தோஷுக்கு எதிராக செய்ய ஆரம்பிக்கிறாள். திடீரென சக்தி மலேசியாவுக்கு போக வேண்டும் என்கிற சூழ்நிலையில், அவளை அனுப்ப ஜனனியும், சந்தோஷும் போகிறார்கள். அப்போது திடீரென்று தாலியை எடுத்து சந்தோஷ் முன்னால் நீட்டுகிறாள் சக்தி.
தமிழ் செல்வி: நனவாகுமா தமிழ் செல்வியின் கலெக்டர் கனவு?
”சந்தோஷ்..இந்த தாலியை என் கழுத்துல கட்டு சந்தோஷ்... நான் சந்தோஷமா மலேசியா போறேன். அங்கே போயி என் குடும்பத்துக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. எனக்கு இந்த தாலி வேணும் சந்தோஷ்.. நீ மனசு மாறிடுவே.. என்னால இனியும் பொறுமையா இருக்க முடியாது” என்று கூறி அழுகிறாள் சக்தி.
சந்தோஷ் அந்த தாலியை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, ”சக்தி என்னால உன் கழுத்துல தாலி கட்ட முடியாது. இது எந்த மாதிரி சூழ்நிலை.. இன்னும் விவாகரத்து கிடைக்கலை. இன்னொரு பொண்ணு கழுத்துல நான் கட்டின தாலி இருக்குது. இப்படி இருக்கும்போது உனக்கு தாலி கட்டுவது சாதாரண விஷயமா போச்சா? என்னால முடியாது சக்தி” என்று கூறுகிறான். ”ஜனனி சந்தோஷை என் கழுத்துல தாலி கட்ட சொல்லு ஜனனி” என சந்தோஷின் மனைவி ஜனனியிடமே கேட்கிறாள் சக்தி. அதிர்ச்சியில் உறைந்து போகிறாள் ஜனனி.