நடிகர் சார்லி, தமிழ் சினிமாவில் வித்தியாசமான நகைச்சுவையாளர். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக நீடிக்கும் அவரது திரை வாழ்க்கையில், 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். யூ-டியூப்பில் வெளியான அவரது சமீபத்திய குறும்படம் 'சண்முகம் சலூன்' பெரும் பாராட்டையும் ஒரு சில விருதுகளையும் பெற்றுள்ளது. அந்தப் படம் ஒரு சலூன் உரிமையாளருக்கும் அவரது வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல்களைப் பற்றியது. சலூன் உரிமையாளராக சார்லி நடித்துள்ளார்.
படத்தில், கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வாடிக்கையாளராக நடித்துள்ளார். நாட்டு நடப்பையும் தொழிலாள வர்க்கம் படும் இன்னல்களையும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இதனை கருப்பையா சி.ராம் இயக்கியுள்ளார். கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமு தங்கராஜ் சலூன் ஷெட் போட்டுள்ளார். இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு, கடந்த மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது.
இந்திய சினிமாவில் அவர் மட்டுமே தனது தொழிலைப் பற்றியும், அது தமிழ் சினிமாவை எவ்வாறு பாதித்தது என்பதையும் பற்றியும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 'தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்புகள் - 1937-1967' என்ற அவரது ஆய்வறிக்கையின் மூலம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், 2019 அக்டோபரில் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”