scorecardresearch

கோவையில் திருடு போன பைக்: பார்சலில் வந்த ஆச்சர்யம்!

இருப்பினும், பைக்கைப் பெறுவதற்கு ரூ .1,400 லக்கேஜ் மற்றும் பேக்கேஜிங் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.

Man returns bike through parcel at coimbatore
Man returns bike through parcel at coimbatore

கோயம்புத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பொது முடக்கத்தால் சிக்கித் தவித்த ஒரு டீ கடை தொழிலாளி, தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை திருடினார். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 29 அன்று, அந்த மோட்டார் சைக்கிளை வண்டியின் உரிமையாளரிடம் திருப்பி அனுப்பினார் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamil News Today Live : தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது

சுலூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், மே 18 அன்று பிரஷாந்த் என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தஞ்சாவூர்,  மன்னார்குடி அருகே உள்ள தனது, சொந்த ஊருக்கு, அழைத்துச் செல்ல விரும்பினார். பைக்கின் உரிமையாளர் சுரேஷ்குமார், கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில், சுலூர் அருகிலுள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு லேத் பட்டறை நடத்துகிறார். “குமாரின் பட்டறையில் அன்று சில வேலைகள் நிலுவையில் இருந்தன. வழக்கம் போல, அவர் பைக்கை வெளியே நிறுத்திவிட்டு கட்டிடத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் வெளியே வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணவில்லை” என்று கூறினார்.

உடனே உள்ளூர் காவல் நிலையத்தை சுரேஷ், அணுகியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ஆனால் அதிகாரிகள் பொது முடக்க வேலைகளில் பிஸியாக இருந்ததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பொது முடக்கம் முடிவடையவிருந்த நிலையில், குமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு அருகிலுள்ள கட்டிடத்தின் உரிமையாளரிடம் சென்று, தனது பைக் குறித்து ஒரு துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சி.சி.டி.வி காட்சிகளை பார்க்க சென்றார். கேமரா காட்சிகளில் சட்டை, மற்றும் பேண்ட் அணிந்த ஒருவர், காலணிகள் இல்லாமல் சுரேஷின் பைக்கோடு தப்பி ஓடுவதைக் காட்டியது.

“அந்த நபர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள இரண்டு தேநீர் கடைகளில் பணிபுரிந்து வந்த பிரசாந்த் என அந்த வட்டாரத்தில் உள்ள ஒருவர் அடையாளம் காட்டினார். பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டை விட்டு வெளியேறி தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு கிளம்பியிருந்தார்.” என்று குமாருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது.

அடுத்த நாட்களில், சுலூரிலிருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ள மன்னார்குடியில் இருந்த பிரசாந்தைக் கண்டுபிடிப்பதற்கான சுரேஷின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

மே 29-ம் தேதி மதியம், அருகிலுள்ள தனியார் பார்சல் சேவையிலிருந்து சுரேஷுக்கு அழைப்பு வந்தது. அவர் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தபோது, தனது வாகன பதிவு சான்றிதழில் (ஆர்.சி) கொடுக்கப்பட்ட முகவரிக்கு பைக் பார்சல் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இருப்பினும், பைக்கைப் பெறுவதற்கு ரூ .1,400 லக்கேஜ் மற்றும் பேக்கேஜிங் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.

பின்னர் இந்த வழக்கை மேலும் தொடர விரும்பவில்லை என்று குமார் கூறினார். இந்த முடிவுக்குக் காரணம், ஒரு வழக்கை பதிவு செய்து புதிதாக விசாரித்தால் காவல்துறையினர் தனது பைக்கை எடுத்துச் செல்லக்கூடும் என்ற அச்சம் தான்.

ரயில்களில் பயணிக்க இ- பாஸ் அவசியம்: விண்ணப்பிக்கும் முறை இங்கே!

ஞாயிற்றுக்கிழமை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், சூலூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஒருவர் குமாரின் புகாரைப் பற்றி விசாரிப்பதாகக் கூறினார். வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தான் பிரசாந்த் பைக்கை திருப்பி அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore man steals bike and returned through parcel