சில மனிதர்கள் விமானத்தில் ஏறி தங்கள் இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்த உடனேயே கண்களை மூடி உறங்க ஆரம்பித்தால் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வரும் வரை கண் விழிக்க மாட்டார்கள். ஆனால் மற்ற சிலரோ விமானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி உறங்க மிகவும் சிரமப்படுவார்கள். விமானத்தில் பறக்கும் போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் செல்லும் வரை உறங்க இயலாமல் சிரமப்படுவது உண்மையிலேயே எரிச்சலூட்டும் விஷயம். கவலையை விடுங்கள். அடுத்த முறை நீங்கள் விமான பயணம் செய்யும் போது வசதியாகவும் தளர்வாகவும் படுத்து உறங்க சில சின்ன விஷயங்களை செய்தால் போதும்.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
உறங்கும் போது அணியும் முகமூடியை எடுத்துச் செல்லுங்கள்
பயணம் செய்யும் போது, உறங்கும் போது அணியும் முகமூடியை எடுத்துச் செல்வது அவசியம். அது அழகானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உறங்கும் போது அணியும் முகமூடி என்பது ஒளி ஊடுருவாமல் தடுத்து நீங்கள் கண்களை மூடி உறங்க வசதியாக இருக்க வேண்டும். விமான ஜன்னல்களில் உள்ள ஒளி மறைப்பானை விமானம் மேல் எழும்பும் போதும் கீழ் இறங்கும் போதும் கட்டாயம் திறந்து வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான விமான நிறுவனங்கள் வலியுறுத்தும். உறங்கும் போது அணியும் முகமூடி உங்கள் உறக்கத்தை ஒளி இடையூறு செய்யாமல் தடுக்கும்.
காதடைப்பான் (ear plugs) எடுத்து செல்லுங்கள்
விமான இஞ்ஜினிலிருந்து எழும் இடையறாத ஓசை உங்கள் உறக்கத்தை இடைஞ்சல் செய்யும். எனவே ஒரு நல்ல காதடைப்பானை விமான பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். இப்போது சந்தையில் பல்வேறு விதமான காதடைப்பான்கள் கிடைக்கின்றன. அவற்றில் இருந்து உங்கள் வசதிக்கேற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து வாங்கி கொண்டு செல்லுங்கள்.
தலையணைகளை எடுத்துச் செல்லுங்கள்
விமான பயணத்தின் போது உங்கள் தலையணையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். உட்கார்ந்த வாக்கிலேயே உறங்க வேண்டிவந்தால், குதிரை காலணி வடிவிலான கழுத்து குஷன்கள் மிகவும் வசதியானதாக இருக்கும். அவை உங்களது கழுத்து மற்றும் தோள்களுக்கு தாங்கும் வலிமையை கொடுத்து நீங்கள் உறங்கி எழும் போது எந்தவித வலியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
நறுமணம்
உங்களை அமைதிப்படுத்தி உறங்கச் செய்யும் குணம் கொண்ட சில நறுமண பொருட்களை விமான பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள் அது உங்களுக்கு கைகொடுக்கும்.
உறக்கம் வரவில்லையே என்ற மன அழுத்தமே உங்களை பெரிதும் உறங்கவிடாமல் செய்துவிடும். விமான பயணத்தின் போது வேறு எதுவும் செய்யமுடியாது என்பதால் தளர்வாக அமர்ந்து, கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்து, உங்கள் புலன்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்து உங்களையே நீங்கள் அமைதிப்படுத்தி எந்தவித அழுத்தமும் இல்லாமல் உணருங்கள். நீங்கள் உறங்கினால் மிகவும் நல்லது. அப்படி உறக்கம் வரவில்லையென்றால் ஒன்றும் கெட்டு போகப்போவதில்லை, அமைதியாக இருந்து மகிழ்ச்சியான சிந்தனை செய்யுங்கள்.