How Stop Hair fall? : உங்கள் தோல் மற்றும் முடி ஆகியவை ஆரோக்கியமானதாக இருப்பதற்கு நீங்கள் உண்ணும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் உட்கொள்ளும் உணவு நமது முடியின் வளர்ச்சி, அடர்த்தி மற்றும் உறுதி தன்மை ஆகியவற்றில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ” முடி வேர்களிலிருந்து வளர்கிறது என்பது நாம் அனைவரும் மறக்க முனைகின்ற உண்மை, எனவே வேர்களை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள நமது தலையின் மேற்பகுதி மற்றும் மயிர்க்கால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்”, என்கிறார் புது தில்லியை சேர்ந்த பிரபல தோல் நோய் நிபுணர் டாக்டர் நிவேதிதா டட்டூ.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
நாம் உண்ணும் உணவு முடி வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?
சில சத்துக்களால் நமது முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியும். மயிர்கால்கள் தொடர்ந்து புதிய முடியை உருவாக்குகின்றன. நாம் உண்கின்ற உணவுகள் முடி வளர்ச்சியையும் அதன் தரத்தையும் பாதிக்கும். வலுவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர சில புரோதங்கள், கொழுப்புகள், ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துகள் நமக்கு தேவை. மாறுபட்ட மற்றும் சத்தான உணவு உட்கொள்வது நகங்கள் மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நபர்களிடம் இந்த வகை மாற்றங்களை எளிதாக காணமுடியும்.
முடி வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் எவை?
வயது முதிர்வின் காரணமாக முடி வளர்ச்சி குறைய துவங்கும் மேலும் அடர்த்தியும் குறையும். சில மயிர்க்கால்கள் புதிய முடி வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதால் அடர்த்தி குறைவது ஏற்படும். மன அழுத்தம் மற்றும் சில உடல்நிலை காரணங்களாலும் திடீர் முடி உதிர்தல் ஏற்படும்.
பின்வரும் சத்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்கள் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
புரதங்கள் மற்றும் அமீனோ அமிலங்கள் : மாமிசம், முட்டை, பீன்ஸ், பயறு மற்றும் பருப்பு வகைகளில் புரதம் மற்றும் அமீனோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: மீன் உணவுகளில் இந்த வகை ஒமேகா 3 கொழுப்பும், வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளன. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயம், கண், முடி மற்றும் தோல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சைவம் உண்பவர்கள் சோயா பீன்ஸ், வால் நட் போன்றவற்றின் மூலம் இந்த வகை ஒமேகா 3 கொழுப்பு சத்துக்களை பெறலாம்.
பயோட்டின் சத்து: முடி உதிர்தல் மற்றும் அடர்த்தி குறைவு பிரச்சனைகளுக்கு காரணம் பயோட்டின் குறைபாடு. சர்க்கரை வள்ளி கிழங்கு, கீரைகள், மாமிசம், பருப்பு வகைகள், மீன் முதலியவற்றில் அடங்கியுள்ள பயோட்டின் சத்து இந்த பிரச்சனையை சரி செய்யும்.
தானியங்களில் அடங்கியுள்ள செலீனியம் சத்து, காய்கறிகள், மாட்டிறைச்சி மற்றும் பழங்களில் நிறைந்துள்ள இரும்பு சத்து, அண்ணாச்சி பழம், தக்காளி போன்றவற்றில் அடங்கியுள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், முளை கட்டிய கோதுமை, கீரைகள், பூசணி விதைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள தத்தநாகம் சத்துகளும் முடி வளர்ச்சி, முடி உதிர்தல் ஆகிய பிரச்சனையை தீர்க்கும்.