scorecardresearch

ஹீரோவாக நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்; ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹீரோவாக நடிக்கும் புகழ்; படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிட்டு அசத்தல்

ஹீரோவாக நடிக்கும் குக் வித் கோமாளி புகழ்; ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Cook with comali Pugazh commits hero as new movie: குக் வித் கோமாளி புகழ் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ். பின்னர் விஜய் டிவியின் சிரிப்புடா, சிரிச்சா போச்சு, கலக்கல் சாம்பியன்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து வந்தார்.

இந்தநிலையில், புகழை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பியவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதன் மூலம் ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘டான்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘வலிமை’ மற்றும் ‘சபாபதி’ ஆகிய சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் புகழ் நடித்தார். தற்போது புகழ் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் பொன்ராம் காம்பினேஷனில் உருவாகி வரும் போலீஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் புகழ். MR Zoo Keeper (மிஸ்டர் ஜூ கீப்பர்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் புகழுக்கு ஜோடியாக ஷ்ரின் காஞ்சவாலா நடிக்கிறார். இந்தப்படத்தை ஜெ சுரேஷ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்த் ஃபேமிலிக்கு இது மறக்க முடியாத நாள்… ஐஸ்வர்யா சொன்ன சீக்ரெட்!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழ், அனைவரது சப்போர்ட்டும் இந்தப் படத்திற்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்திற்காக நிஜமான புலியுடன் தான் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் புகழ் குறிப்பிட்டுள்ளார்.

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் இன்று (மார்ச் 20) ஊட்டியில் ஆரம்பமாகிறது. இதையடுத்து, படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புகழின் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போஸ்டரை நிகழ்ச்சியில் வெளியிட்ட குழுவினர், தொடர்ந்து அவரை கொண்டாடினர். மேலும் அவர் மற்றும் இந்த போஸ்டருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு புகழ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali pugazh commits hero as new movie

Best of Express