’நீங்க சொல்றது சரி தான், ஆனா பண்றது நியாயமா?’ - அஞ்சலியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ஆனால் பாருங்கள் அந்த கிச்சன் ஏற்கனவே படு சுத்தமாக தான் இருக்கிறது.

ஆனால் பாருங்கள் அந்த கிச்சன் ஏற்கனவே படு சுத்தமாக தான் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anjali cleaning her kitchen, corona lockdown

அஞ்சலி

Actress Anjali Instagram Video: தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35000-ஐ கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இது வரை 2323 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.  குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 906 நபர்களுக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சினிமா, சீரியல், பிஸினெஸ் வுமன்: ’கோலங்கள்’ ஆர்த்தி

Advertisment

இந்நிலையில் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மக்கள் டிவி, OTT-யில் படம் என தங்களது பொழுதை கழிக்கிறார்கள். படபிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் ஒர்கவுட், யோகா, சமையல் என தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர்.

மூன் வாக் நடனத்தின் முன்னோடி – நிச்சயம் இவராகத்தான் இருக்க வேண்டும் : வைரலாகும் வீடியோ

Advertisment
Advertisements

அதை வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை அஞ்சலி தற்போது அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “ஜிம்முக்கு போகமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டில் இருக்கும் கிச்சனை சுத்தம் செய்தாலே அது நல்ல உடற்பயிற்சி” எனக் குறிப்பிட்டு, தனது கிச்சனை சுத்தப்படுத்துகிறார். ஆனால் பாருங்கள் அந்த கிச்சன் ஏற்கனவே படு சுத்தமாக தான் இருக்கிறது. இதனை ரசிகர்களும் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Anjali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: