Corona outbreak bollywood kollywood actors self quarantined and ask people to stay home
Corona outbreak bollywood kollywood actors self quarantined and teach people : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைவரும் தேவை ஏதும் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த 21 நாட்களை மிகவும் ஆக்கப்பூர்வமாக செலவிடுங்கள். குடும்பத்துடன் இருங்கள் என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். நீங்களும் ஹீரோக்கள் தான், இவர்களைப் போன்று வீட்டில் இருந்து கொரோனாவுக்கு எதிராக போராடினால்.
இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பே குவாரண்டைன் ஆகிவிட்டார் நடிகை தீபிகா படுகோன். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவற்றை செய்து வருகிறார்.
உலகின் தலை சிறந்த சொல் செயல் தான்.. கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம். செய்து காட்டுவோம் என்று தன்னுடைய தரப்பில் இருந்து பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டாப்ஸி
பாலிவுட் படங்களில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக பல படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸியோ ”டைம் டேபிள்” போட்டு வீட்டு வேலைகளை செய்து வருகிறார். வீட்டினை அலங்கரித்தல், சமைத்தல், யோகா என்று அவர் ஈடுபட்டு வருகிறார்.
கேத்ரினா கைஃப்
சோசியல் டிஸ்டன்ஸிங் மூலம் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க முடியும். அடுத்த 10 முதல் 15 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாகும். பொதுமக்கள் பொது இடங்கள், பொது போக்குவரத்து பயன்பாட்டினை தவிர்க்கவும். மாநில அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவும். வீட்டில் இருக்கவும். பாதுகாப்பாக இருங்கள் என்று நடிகை கேத்ரீனா கைஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார். தண்ணீரினை அதிகமாக செலவு செய்யாமல் பாத்திரங்களை கழுவுவது எப்படி என்று டுட்டோரியல் எடுத்துக் கொண்டிருக்கின்றார் கேத்ரினா கைஃப்.