Nayantahra : சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளையும் படிப்படியாக தாக்கத் தொடங்கியது. தற்போது கொரோனா தொற்று இல்லாத நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்ந்தியாவில் இத்தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வர 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவே மக்கள் கூட்டமகாக் கூடும் மால்கள், திரையரங்குகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதோடு திரைப்படம், சீரியல், விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெஃப்சி அமைப்பில் உள்ள 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில்லாமல், வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு முன்னணி நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்று பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.
பெஃப்சி அறிக்கை
அவரது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கினர். அந்த லிஸ்டில் தற்போது நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார். பெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
“திரைப்படத் தொழிலாளர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என இதுகுறித்து அறிக்கையை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.