குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது எப்படி? விளக்குகிறார் சமீரா!

இந்த வீடியோவில் கைகளை சோப்பினாலோ, அல்லது சேனிடைஸ்சர் பயன்படுத்தியோ சுத்தம் செய்தலை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Coronavirus Outbreak : Actress Sameera Reddy gives awareness with her son Hans Varde
Coronavirus Outbreak : Actress Sameera Reddy gives awareness with her son Hans Varde

Coronavirus Outbreak Actress Sameera Reddy gives awareness with her son Hans Varde : நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள்,  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய மகன் ஹன்ஸ் வர்தேவுடன் இணைந்து சமூக வலைதளத்தில் கைகளை எப்படி கழுவ வேண்டும்.   எப்படி தங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் குர்ஆனிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோவில் கைகளை சோப்பினாலோ, அல்லது சேனிடைஸ்சர் பயன்படுத்தியோ சுத்தம் செய்தலை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கொரோனாவில் இருந்து எப்படி பாதுகாப்பது போன்ற சந்தேகங்கள் இருக்கின்ற பட்சத்தில், இந்த வீடியோ நிச்சயம் உதவும். பொதுவெளியில் இருந்து தனித்து இருத்தல் தொடர்பாக தன்னுடைய மகனுடன் இணைந்து வீடியோவினை வெளியிட்ட சமீரா. அதில் அவர் தங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பாகவும், அடுத்தடுத்து வரும் வாரங்கள் உண்மையாகவே எவ்வளவு கடினமானதாக இருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன? 

சொல்ல மறந்துட்டோம்… எல்லாரும் மறக்காமல் தங்களின் கைகளை 20 நொடிகளுக்கு சோப்பில் கழுவுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஜனதா தடை இருக்கிறது. காலையில் இருந்து மாலை வரை வீட்டிலேயே இருப்போம். நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak actress sameera reddy gives awareness with her son hans varde

Next Story
மகராசி: என்ன தான் மாறுவேஷம் போட்டாலும், புருஷனை தெரியாம போய்டுமா?Magarasi Sun TV serial, bharathi puvi, tamil serial news, மகராசி சீரியல், சன் டிவி சீரியல், பாரதி புவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express