Corona Outbreak : ’கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக ’கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோக்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
”அச்சமில்லை அச்சமில்லை” பாரதியின் பாடலோடு நடைபெற்ற மயிலாப்பூர் ஷாஹீன் பாக் போராட்டம்!
கோப்ரா குழு ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தியது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ”கோப்ராவை கொரொனா தாக்கி விட்டது. இந்திய அரசாங்கத்தின் பயண தடை விதிகளின் காரணமாக ரஷ்யாவில் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போங்கயா நீங்களும் உங்க கொரொனாவும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இதேபோல கொரொனா தாக்குதலால் நடிகர் கார்த்தியின் ’சுல்தான்’ படக்குழுவும் பாதிப்படைந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தின் இயக்குனர் பக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் படம் தான் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பை முடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சுல்தான் ஆரம்பத்தில் கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை படம் குறித்த எந்த அப்டேட்டுகளும் வரவில்லை. படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், ”கொரோனா வைரஸ் தாக்குதல் தான் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை தாமதப்படுத்துவதாகக் கூறி” ட்வீட் செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
’பீதிக்கு நோ, முன்னெச்சரிக்கைகளுக்கு யெஸ்’ : கொரொனா குறித்து பிரதமர் மோடி
"கொரொனா தாக்குதல், சுல்தான் புதுப்பிப்பு உட்பட அனைத்தையும் தாமதப்படுத்துகிறது! அமைதியாக, பாதுகாப்பாக இருங்கள்" என ட்வீட்செய்துள்ளார் பிரபு. இப்படி கொரொனா தொற்றால், பல விஷயங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”