PM Narendra Modi :மக்கள் கொரொனா அச்சத்தில் சிக்கித் தவிக்கும் வேளையில், "பீதியடைய வேண்டாம்" என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். “கொரொனா பரவுதலை தடுக்க, "தேவையற்ற பயணம்" மற்றும், பெரிய கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு எந்த மத்திய அமைச்சரும் வெளிநாடு செல்லமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார் மோடி.
இன்றைய செய்திகள் Live : தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,096 சரிவு
வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) இந்தியர்களை "எங்கிருந்தாலும் அங்கேயே இருங்கள்" என்றும், "கட்டாய காரணங்களுக்காக" மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, ”பீதிக்கு நோ சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைகளுக்கு யெஸ் சொல்லுங்கள். மத்திய அரசின் எந்த அமைச்சரும் எதிர்வரும் நாட்களில் வெளிநாடு செல்லமாட்டார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன். பரவல் சங்கிலியை உடைத்து, பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
”COVID-19 கொரொனா வைரஸ் நிலைமை குறித்து அரசாங்கம் முழுமையாக விழிப்புடன் உள்ளது. அமைச்சகங்கள், மற்றும் மாநிலங்கள் முழுவதும், அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் விசாக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதிலிருந்து சுகாதாரத் திறன்களை அதிகரிப்பது வரை பரவலானவை” என்றும் அவர் கூறினார்.
கொரோனாவுக்கு பலியான முதல் இந்தியர் ; உறவினர்களின் தவறான வழிநடத்துதலால் நிகழ்ந்த சோகம்!
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களில் கொரொனா பற்றி விவாதித்தார் மோடி. இதைக் கட்டுப்படுத்துவதில், அரசாங்கத்தின் கவனம் இருப்பதாக MEA கூறியது. “அரசாங்கத்தின் உடனடி கவலை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தான். மக்கள் பீதி அடையத் தேவையில்லை. இந்தியர்கள் எங்கிருந்தாலும் அங்கேயே தங்கியிருக்கவும், கட்டாய காரணங்களுக்காக மட்டுமே பயணிக்கவும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”