New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/EL60DcxU4AAnJl0.jpg)
Darbar Movie Review Live, Darbar Movie Release Live
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தர்பார் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
Darbar Movie Review Live, Darbar Movie Release Live
Darbar Release : இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான நடிகர் ரஜினிகாந்தின் 'தர்பார்' நாளை திரைக்கு வரவிருக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் ரஜினிகாந்தின் முதல் படமான இது, அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் (25 ஆண்டுகளுக்குப் பிறகு) பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. இந்நிலையில் இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக (ப்ரீ ரிலீஸ்) ஆன்லைன் போர்ட்டல் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளாவிய தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமைகள் இதில் அடங்கும். அதோடு 'தர்பார்' படத்தின் தமிழக தியேட்டரிக்கல் ரைட்ஸ் ரூ. 60 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திரா உரிமைகள் ரூ.24.2 கோடிக்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தர்பார் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
பொங்கல் சிறப்பு பஸ்கள்: சென்னையில் இருந்து புறப்படும் இடங்கள் அறிவிப்பு
ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நட்சத்திரங்கள் சுனில் ஷெட்டி மற்றும் பிரதீக் பப்பர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகும் இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.