New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/12/Rajinikanth-Birthday-1-1.jpg)
ரஜினிகாந்த்
அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்
Darbar Premiere Show: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரித்திக் ரோஷனைப் போல் ஆடிய ராஷ்மிகா : வைரலாகும் வீடியோ!
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலரும், பாடல்களும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் ஜனவரி 9-ம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் அமெரிக்காவில் ஜனவரி 8-ம் தேதி பிரீமியர் ஷோ-வாக வெளியாகிறது தர்பார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08-ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. வட அமெரிக்காவின் முன்னணி ஊடகமான பிரைம் மீடியா, கடந்த 10 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.
’ஆதித்ய வர்மாவில்’ இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்கா முழுவதும் சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது. ரஜினிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு இந்த எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.