Rashmika Mandanna’s Viral Video : நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக விஜய் தேவர்கொண்டா நடித்த ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பாரத் கம்மா எழுதி இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தது.
’ஆதித்ய வர்மாவில்’ இதுவரை நாம் பார்க்காத காட்சிகளை வெளியிட்ட துருவ்
நடிகர் நித்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு படமான ‘பீஷ்மா’வில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. வெங்கி குடுமுலா இயக்கும் இப்படம் ஒரு ரோம்-காம் வகையான திரைப்படம் என்று கூறப்படுகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில், நாக வம்சி இப்படத்தை தயாரிக்கிறார்.
Love to you @iHrithik sir,,
From #Bheeshma team from Positano✨????
Ps. Sorry for the no sync in music. ????@actor_nithiin @VenkyKudumula pic.twitter.com/yn3DSGdPZN— Rashmika Mandanna (@iamRashmika) December 26, 2019
சமீபத்தில் வெளியான பீஷ்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது, (பொசிடானோ) படப்பிடிப்பு இடத்திலிருந்து ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. அதில் அவரும் நிதினும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் நடன வளைவுகளைப் போல ஆடுகிறார்கள். சமீபத்திய ஹிட்டான ‘வார்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘குங்ரூ’ பாடலில் ரித்திக் ஆடிய ஸ்டெப்கள் தான் அது.
ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!
”லவ் யூ ரித்திக் சார். போசிடானோவிலிருந்து ’பீஷ்மா’ டீம். பாடல் நான் – சிங்கிற்கு மன்னிக்கவும்” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.