Superstar Rajinikanth’s Darbar Updates: கடந்த வருட பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படம் வெளியானது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் மாஸான தோற்றத்தில் ரசிகர்களை மகிழ்வித்தார் ரஜினி. இதற்கடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரின் 167-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
Gold Rate Today: உங்க வீட்டுப் பெண்களிடம் இச்செய்தியை பகிர வேண்டாம் – கண்கலங்க வைக்கும் தங்க விலை
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள்களும் ட்ரைலரும் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாகிறது. அதோடு, தியேட்டர் மற்றும் நான் தியேட்டரிக்கல் உரிமம் (ப்ரீ பிஸினஸ்) 221 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) தர்பார் படத்திற்கு ‘யு / ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பதாக, கடந்த டிசம்பர் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதோடு படத்தின் மொத்த ரன்னிங் நேரம் 159.28 நிமிடங்கள், அதாவது 2 மணி 40 நிமிடங்களுக்கு இப்படம் ஓடும்.
தர்பார் பட புரொமோஷனின் ஒரு பகுதியாக, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ‘தர்பார் ரஜினி’யின் உருவம் அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் படங்களை படத்தின் இசையமைப்பாளரும், ரஜினிகாந்தின் மருமகனுமான அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 4 விமானங்களில் தர்பார் ரஜினியின் உருவம் இடம் பெற்றிருப்பதை ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தர்பார் படத்திற்கு இதுவரை சிறப்பு காட்சிக்கு யாரும் அனுமதி கேட்கவில்லை. திரைப்படம் 9-ம் தேதி தான் வெளியாக உள்ளது. முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும், மறுக்கப்படாது. எங்களுக்கு கட்சி, நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பாகுபாடு எதுவும் கிடையாது. நடிகர் விஜய், அஜித் படங்கள் மற்றும் ரஜினியின் காலா போன்ற படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று அரசை அணுகினால் முதல்வரின் ஆலோசனை பெற்று பரிசீலிக்கப்படும்” என்றார்.

படம் வெளியாகும் நாளில் சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கு முன்பு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவவும் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு அனுமதிகோரி கனகராஜ் என்பவர் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருக்கிறார். இதனைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், திரையரங்கம் உள்ள இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி, வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சேலை… பேக்லெஸ் பிளவுஸ்… முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் வாணி போஜனின் படங்கள்!
”மும்பை போன்ற பெருநகரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி படம் பேசுகிறது. பொதுவாக இரண்டு வகையான போலீசார் உள்ளனர். சக்தி வாய்ந்தவர்களின் கைகளில் பொம்மையாக சிலரும், நேர்மை மற்றும் தனித்துவம் உள்ளவர்கள் மற்றவர்கள். இதில் இரண்டாம் வகை போலீசாரை சமூகமும், திரைப்படங்களும் சிங்கமாகக் கொண்டாடுகின்றன.
ஹைதராபாத் போலீசார் திஷா பாலியல் வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டரில் கொன்றபோது ஒரு தந்தையாக நான் மகிழ்ந்தேன். போலீசார் மற்ற குற்றவாளிகளுக்கு முன்மாதிரியாக, உடனடி நீதியைக் கொடுக்கும்போது, பொதுமக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள். குற்றம் நடந்த இடத்திலேயே குற்றவாளிகள் கொல்லப்பட்டதைப் போலவே தர்பாரிலும் காட்டியிருக்கிறோம். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் அந்த காட்சியைப் படமாக்கியிருந்தோம். ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு ரஜினி சார் அந்த காட்சியைப் பற்றி என்னிடம் பேசினார்” என தர்பார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்திய நேர்க்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
முருகதாஸின் இந்த பேட்டி, பாலியல் குற்றங்களை மையப்படுத்தி தர்பார் உருவாகியிருக்குமோ என்ற யூகங்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ‘தர்பார்’ படத்துக்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் ஓபனாகி விட்டது. ஒவ்வொரு நொடிக்கும் ’சர்ரென’ டிக்கெட்டுகள் புக்காகிக் கொண்டிருக்கின்றன. சாதாரண நாட்களில் ரஜினி படம் வெளியானாலே, திருவிழா போல கொண்டாடப்படும். பொங்கல் ஸ்பெஷல் என்றால் சொல்லவா வேண்டும். ஆகையால் இப்போதே ஃபெஸ்டிவல் மோடுக்கு சென்று விட்டனர் ரஜினி ரசிகர்கள்.