கபில் தேவ் தம்பதியை அச்சு அசலாக பிரதிபலித்த ரன்வீர் – தீபிகா ஜோடி

ரோமி தேவாக தீபிகாவும், கபில் தேவாக ரன்வீரும் ஒருவரையொருவர் பார்த்து, புன்னகைத்துக் கொள்கிறார்கள். 

Deepika Padukone, Ranveer Singh, 83 movie
Deepika Padukone, Ranveer Singh, 83 movie

இந்திய சினிமாவில் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதல்ல. அரசியல் ஆளுமை, விளையாட்டு வீரர்கள், ஆராய்ச்சியாளர்கள் என இந்த பட்டியல் நீளும்.

ஹாய் கைய்ஸ் : இப்போ மாணவர் தலைவர்…நாளை இந்த மாநிலத்துக்கேவா….

அந்த வகையில் பாலிவுட் இயக்குநர் கபீர் கான் 83 என்ற படத்தை இயக்கியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில் தேவின் மனைவி ரோமி தேவாக, ரன்வீரின் நிஜ மனைவி தீபிகா படுகோன் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் தீபிகாவின் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள அந்த படத்தில், ரோமி தேவாக தீபிகாவும், கபில் தேவாக ரன்வீரும் ஒருவரையொருவர் பார்த்து, புன்னகைத்துக் கொள்கிறார்கள்.

தனது லுக்கை தாங்கிய அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தீபிகா, ‘விளையாட்டு வரலாற்றில் மிகச் சிறந்த தருணத்தைக் கொண்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த மரியாதை. ஒரு கணவரின் தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் வெற்றியாளராக வலம் வர மனைவியின் பங்கு எத்தகையது என்பதை என் தாயின் மூலம் பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க 15 ஆவணங்களும் போதவில்லை… என்.ஆர்.சியில் நீடிக்கும் குழப்பம்!

அந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த ரன்வீர் சிங், “என் சிறகுகளுக்கு அடியில் உள்ள காற்று” என தீபிகாவை புகழ்ந்திருக்கிறார். 1983-ல் முதன்முறையாக இந்திய அணி உலகக் கோப்பை வாங்கியதை மையப்படுத்துவதால் இப்படத்திற்கு ‘83’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Deepika padukone ranveer singh 83 movie romi dev kapil dev170409

Next Story
வலிமை படப்படிப்பில் “தல” அஜித்திற்கு காயம் – விபத்தின் நேரடி காட்சிகள் (வீடியோ)Ajith, ajith kumar, thala ajith, valimai shooting, bike accident, Ajith, injured, h. vinoth, nerkonda paarvai, fans, hashtag, trending
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com