/tamil-ie/media/media_files/uploads/2020/07/cats-13.jpg)
Deepika Padukone's favourite comfort food Rasam Saadham with Mango Pickle : தீபிகா படுகோனுக்கு உணவு என்றால் அத்தனை பிரியம். இதில் ரகசியம் என்று ஏதும் இல்லை. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் விதவிதமாக சமைத்து அசத்தி வருகிறார். தீபிகா படுகோனும் மற்றவர்களைப் போல் இன்ஸ்டகிராமில் “Ask Me Anything" என்று, ரசிகர்களுக்கு ஒரு செசன் வைத்தார். அதில் தீபிகாவிடம் கேட்க ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.
இந்த செசனை பயன்படுத்திய தீபிகாவின் ரசிகர் ஒருவர் “உங்களால் வாழ்நாள் முழுவதும் சாப்பிட கூடிய ஒரு உணவு என்ன?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தீபிகா படுகோன், சாதமும், ரசமும், மாங்காய் ஊறுகாயும் இருந்தால் போதும். வாழ்நாள் முழுவதும் இந்த உணவை உண்டு வாழ்ந்துவிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா; ஆனாலும் குறைவான இறப்பு விகிதம்!
அதே போன்று தென்னிந்திய ஃபில்டர் காஃபியும், தேநீரும் மிகவும் பிடித்த பானங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தென்னிந்தியாவில் பிறந்து பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் கால்த்தடம் பதித்த தீபிகா இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். அவரைப் போன்று நீங்களும் ரசப் பிரியரா? உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us