Dharala Prabhu Movie Review : திரைத்துரைக்கு முன்பே வந்து விட்டாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம், ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரைஸாவுடன் இணைந்து அவர் நடித்த, ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது அவர் நடித்திருக்கும் படம், தாராள பிரபு. இயக்குநர் கிருஷ்ண மாரிமுத்து இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், நடிகை தான்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா ஜெராக்ஸ், உண்மை இல்லை – ஸ்ரீ ரெட்டி
பிரபுவாக வரும் ஹரிஷ் கல்யாண், ஃபுட்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஒரு சந்திப்பில் ஹீரோயினுடன் காதல் துளிர் விடுகிறது. இதற்கிடையில் மருத்துவராக வரும் நடிகர் விவேக் குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு ஆரோக்கியமான குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணுவுள்ள டோனரை தேடி அலைகிறார். ஒரு வழியாக பிரபுவை தேடி பிடித்து அவரை, சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே தான்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தான்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? விந்தணு தானம் செய்பவராக இருந்த ஹரிஷ்க்கு எதுவும் உடலில் எதுவும் பிரச்சனையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
லவ், ரொமான்ஸ் படங்களாக நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், வழக்கமான காதல், பிரிவு என்பதிலிருந்து சற்று மாறுபட்டு விந்தணு தானம் செய்பவராக நடித்திருப்பது கை கொடுத்திருக்கிறது. ஹீரோயின் தான்யா ஹோப், அலட்டல் இல்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார்.
டாக்டர் கண்ணதாசனாக படம் முழுக்க நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் காமெடி நடிகர் விவேக். இக்கால தலைமுறைக்கு ஏற்றபடியான காமெடியில் டீசண்டான அடல்ட் காமெடியை மிக்ஸ் செய்து அவ்வப்போது சின்ன சின்ன டோஸ் கொடுப்பது ரசனை.
’பிக் பாஸ் பையன், பிகில் பொண்ணு’ : லிஃப்ட் ஃபர்ஸ்ட்லுக்!
இந்தியில் ஹிட்டான ’விக்கி டோனர்’ என்ற ஹிட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி இயக்கியுள்ளார், கிருஷ்ணா. குழந்தையின்மையை முன்னிலைப்படுத்தி கருத்தரித்தல் மருத்துவமனையின் வியாபாரம் அதிகரித்துள்ள, இக்காலத்தில் விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்ய வாழ்கையின் ஆரோக்கியத்தை சிம்பிளாக விளக்கியிருக்கிறார்கள்.
ஒருமுறை பார்க்கலாம் தாராள பிரவுவை!