scorecardresearch

ஹீரோவாக பிரபல நடிகர்: இயக்குநராக தயாநிதி அழகிரி!

“ஒரு இயக்குனராக இருப்பது முற்றிலும் மாறுபட்டதாக உணர்ந்தேன். நிறைய கற்றுக் கொண்டேன்.”

Dhayanidhi Alagiri, Mask Shortfilm
தயாநிதி அழகிரி

பூட்டுதலின் போது பல நபர்கள் கூடி ஒன்றாக இருக்கும் இடம் சமூக ஊடகம்.  நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் படிப்பது முதல், அவர்களின் எண்ணங்களைப் பகிர்வது வரை, சமூக ஊடகங்கள் பலருக்கும் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் பரவிய எதிர்மறையின் அளவுதான் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியை இயக்குநராக மாற்றியுள்ளது. ’மாஸ்க்’ என்ற அவரது குறும்படம் ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஆராய்கிறது. சமூக ஊடகங்களில் அவனது நடத்தை எவ்வாறு என கண்காணிக்கப்படுகிறது.

Tamil News Today Live: அடல் சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் பிரதமர்

“நான் நிறையப் படித்தேன், பூட்டப்பட்ட காலத்தில் என் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டேன். ஆனால் செய்திகளை படிக்கும் போதோ அல்லது ட்விட்டரை பார்க்கும் போதோ, நேர்மறையான விஷயம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். தொற்றுநோய் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றிய செய்தியாக இருந்தாலும், எதிர்மறையும் வெறுப்புமாக இருந்தது. இது இறுதியில் சமூக ஊடக எதிர்மறையை மையமாக வைத்து, ஒரு குறும்படம் இயக்க என்னை தூண்டியது. நான் ஸ்கிரிப்டை எழுதி, எனக்குத் தெரிந்த ஒரு சில இயக்குநர்களுடன் விவாதித்தேன். பின்னர் எனது இரண்டு நண்பர்களுடன் அமர்ந்து மாற்றங்களைச் செய்தேன். எல்லோரும் இது இப்போதைக்கு தேவை என உணர்ந்தார்கள்” என்றார் தயாநிதி.

படத்தின் கதையோடு பொருந்திப் போகும் ஒரு தலைப்பை வைக்க தான் விரும்பியதாக, தயாநிதி கூறுகிறார். “முழு படமும் ஒரு ட்வீட்டில் தொடங்குகிறது. பொது மன்றத்தில் நீங்கள் எப்படி நடந்துக் கொள்கிறீர்களோ, அது தான் நீங்கள். சமூக ஊடகங்களில் மக்கள் வெவ்வேறு முகமூடிகளை அணிவார்கள். அதனால் ஸ்கிரிப்டுடன் இணையும் ஒரு தலைப்பை வைக்க நான் விரும்பினேன்” என்றார் தயாநிதி.

ஒரு பிரபல இயக்குனர்-நடிகர் கதாநாயகனாக இதில் நடிப்பதாக, தயாநிதி கூறுகிறார். “நான் விரைவில் அவர் பெயரை வெளிப்படுத்துவேன். ஆனால் அவரைத் தவிர, மகத் ராகவேந்திரா, லல்லு, பாஷா மற்றும் அலெக்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பெரியார் குத்து பாடலுக்கு  இசையமைத்த ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும், நட்பே துணை புகழ் ஃபென்னி ஆலிவர் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதி நவீன வசதிகளுடன் உலகின் மிக நீள சுரங்கப் பாதையை திறந்து வைத்தார் மோடி!

இப்படம் மதுரை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது. “நான் ஒரு தயாரிப்பாளராக இருந்தபோது, எனக்கு செட்டில் அதிக வேலை இருக்காது, என்பதால் அங்கு செல்ல மாட்டேன். ஆனால் ஒரு இயக்குனராக இருப்பது முற்றிலும் மாறுபட்டதாக உணர்ந்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி, அட்லீ ஆகியோரிடம் பணிபுரிந்தவர்கள் ‘மாஸ்க்’ குறும்படத்தில் எனக்கு உதவியாளர்களாக பணியாற்றினர்” என்றார் தயாநிதி.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhayanidhi alagiri debut directorial mask shortfilm